அசன் சத்பாரா


அசன் சத்பாரா (செயல்திறன் பெருமை) (இயற்பெயர் அசன் ஆசாத்; பிறப்பு 1963 ஏபரல் - 2016 நவம்பர் 21) இவர் ஒரு பாக்கித்தானின் மலையேறுபவர் ஆவார். கில்கிட்-பால்டித்தானில் உள்ள ஸ்கர்டுவில் இருந்து மலையேறும் சாகசக்காரர் ஆவார். உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் (8848 மீ), கே 2 (8611 மீ), காசர்பிரம் I (8080 மீ), காசர்பிரம் II (8034 மீ), நங்க பர்வதம் (8126 மீ) மற்றும் பல்சான் காங்ரி (8051 மீ) உட்பட ஆறு முறை எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் ஏறிய முதல் பாக்கித்தானியராவார். பிராணவாயுவைப் பயன்படுத்தாமல் ஐந்து எண்னாயிரம் மீட்டரை மீறும் மலைகளை ஏறிய பெருமையும் அவருக்கு உண்டு. ஆரம்ப அறிக்கைகளுக்கு மாறாக, மோசமான வானிலை காரணமாக எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது மட்டும் பிராணவாயுவைப் பயன்படுத்தியதாக அசன் சத்பாரா தெளிவுபடுத்தினார். அவர் புற்றுநோயால் 2016 நவம்பர் 21 அன்று பாக்கித்தானின் ராவல்பிண்டியில் காலமானார்.

அசன் சத்பாரா
செயல்திறன் பெருமை
பாக்கிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், ஸ்கர்டுவில் தனது சொந்த சுவரொட்டியின் முன் நிற்கும் சத்பாரா
தாய்மொழியில் பெயர்ﺣﺴﻦ ﺳﺪﭘﺎرہ
பிறப்புஅசன் ஆசாத்
1964 ஏப்ரல் 3
சத்பாரா கிராமம், ஸ்கர்டு
இறப்பு21 நவம்பர் 2016(2016-11-21) (அகவை 53)
பணிசாகசக்காரர், மலையேற்றம், அதி உயரத்தில் சுமைத் தூக்குபவர்

பின்னணி தொகு

ஸ்கர்டுவிலிருந்து 7 மைல் தொலைவில் உள்ள பால்டிஸ்தானின் தொலைதூர பகுதியில் உள்ள "சத்பாரா" என்ற சிறிய கிராமத்தில் அசன் சத்பாரா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். [1] அவரது குழந்தைப் பருவத்தில் எந்தப் பள்ளியும் அருகில் இல்லை. எனவே அசன் தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு விவசாயியாகவும் கால்நடைகளை மேய்ப்பவராகவும் இருந்தார். அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால், அவர் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதே. அவர் தனது குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதில் பெருமிதம் கொண்டார். அவருக்கு நான்கு குழந்தைகள் (3 மகன்கள் மற்றும் ஒரு மகள்) இருந்தனர். இவரது மூத்த மகன் ஆரிஃப் முதுநிலை வணிக நிர்வாகம் பயின்று வருகிறார் [2] [3]

1993 ஆம் ஆண்டில் அதிக உயரமான மலையில் சுமை தூக்குபவராக தனது மலையேறும் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பிறகு ஒரு பிரபலமான மலையேறுபவர் ஆனார். [4] ஸ்கர்டுவில் மலையேறப் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கான ஒரு சிறிய கடை அவருக்கு இருந்தது. அவரது அர்ப்பணிப்பும் தன்னம்பிக்கையும் தான் அவரை உலகின் மிக உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.

தொழில் தொகு

நிசார் உசேன் (சத்பாரா கிராமத்தைச் சேர்ந்தவர்) என்பவருக்குப் பிறகு, பாக்கித்தானின் 8000 மீட்டர் சிகரங்களில் ஐந்தையும் மலையேறிய இரண்டாவது பால்டித்தானி ஆவார். அதிநவீன மலையேறும் உபகரணங்கள் ( பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களால் நிதியுதவியால் பெறப்பட்டவை) பொருத்தப்பட்ட மேற்கு நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மலையேறுபவர்களைப் போலல்லாமல், அசன் சத்பாரா தனது வாழ்க்கையை புதிதாக, மிகக் குறைந்த வளங்களுடன் தொடங்கினார், மேலும் அவருக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களுடன் மலை ஏறினார். அவர் கொரியர்கள் மற்றும் போலந்து தலைமையிலான பயணங்கள் உட்பட பயணங்களுக்கு ஒரு சுமைதாங்கியாக பணியாற்றினார். ஸ்கர்டு கடைவீதியில் பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய மலையேறும் கருவிகளுக்காக ஒரு கடையை நடத்தினார்.

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த பிறகு, அவர் ஒரு நேர்காணலில், நிதியுதவி செய்தால் 14 உயராமான மலைச் சிகரங்களைக்கூட தன்னால் அடைய முடியும் என்றும், இது தொடர்பாக பாக்கித்தான் அரசை அல்லது சர்வதேச நிறுவனங்களை கோரியுள்ளதாகவும் கூறினார். அவரின் மற்றொரு கனவு, அவரது நகரத்தில் ஒரு மலையேறும் பள்ளியைத் திறக்க வேண்டும், இதனால் அவரும் அவரைப் போன்றவர்களும் தங்கள் அறிவை உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு மாற்ற முடியும் எனறு விரும்பினார்.

விருது தொகு

2008 ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசு அவருக்கு அதிபரின் "செயல்திறமை விருதினை" வழங்கியது [5] .

2019 ஆகஸ்ட் 14, அன்று, பாக்கித்தான் அரசு அவருக்கு மரணத்திற்கு பின்னர் அதிபரின் செயல்திறன் பெருமை வழங்கியது. அவரது பல குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக அதிபரின் பெருமையை வழங்கினார். இவர் ஆறு முறை எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் ஏறிய முதல் பாகிஸ்தானியர் ஆவார், இதில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரமும் அடங்கும் . விருது வழங்கும் விழா 2020 மார்ச் 23 அன்று நடைபெறும். [6]

மலையேறுதல் ஆலோசகர் தொகு

புதியதாக மலையேறுபவர்களுக்கு அசன் சத்பாரா ஒரு இலவச ஆலோசகராக இருந்தார். பாக்கித்தானின் "முதல் பெரிய சுவர் ஏறும் பயணம்" அணிக்கு அவர் வழிகாட்டுதலை வழங்கினார். [7]

குறிப்பிடத்தக்க ஏறுதல்கள் தொகு

சில சமயங்களில் பன்னாட்டு நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு மலையேறுபவர்களைப் போலல்லாமல், குறிப்பாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் [8], மலையேறிய ஒரே பாக்கித்தானியர் அசன்: [9] [10]

இறப்பு தொகு

2016 அக்டோபர் 8, அன்று அவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. [11] ராவல்பிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறிது காலம் தங்கிய பின்னர், அவர் ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். [12] அங்கு 2016 நவம்பர் 21, அன்று இறந்தார். [13] கர்கிசா இச்தாங் ஸ்கர்டுவில் உள்ள அவரது மூதாதையர் மயானத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார் [14]

குறிப்புகள் தொகு

  1. Haider Ali Sindhu (November 21, 2016). "Pakistani mountaineer Hassan Sadpara dies in Rawalpindi". Daily Pakistan. பார்க்கப்பட்ட நாள் November 21, 2016.
  2. Shahzeb Jillani (August 26, 2014). "Hassan Sadpara – Only Pakistani to Climb Six Out of Fourteen 8000er Peaks". BBC. பார்க்கப்பட்ட நாள் November 23, 2016.
  3. "Hasan Sadpara dies: Pakistan mourns loss of 'hero' climber to blood cancer". BBC. November 21, 2016. பார்க்கப்பட்ட நாள் November 23, 2016.
  4. Jamal Shahid (November 23, 2016). "Hassan Sadpara- man who braved heights". Dawn News. பார்க்கப்பட்ட நாள் November 23, 2016.
  5. Maj Sameer Azhar (English) (July 16, 2016). "Hassan Sadpara – Only Pakistani to Climb Six Out of Fourteen 8000er Peaks". Hilal (English) Magazine. பார்க்கப்பட்ட நாள் November 23, 2016.
  6. "Top 20 distinguished recipients of the Pakistan Civil Awards". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-07.
  7. Capital’s climbers scale Trango Braak in G-B, The Tribune, 21 October.2013.
  8. PPI (November 21, 2016). "Renowned Pakistani mountaineer Hassan Sadpara passes away". The News International. பார்க்கப்பட்ட நாள் November 21, 2016.
  9. Haseeb Bhatti and Abdul Ghaffar (November 21, 2016). "Renowned mountaineer Hassan Sadpara passes away". Dawn News. பார்க்கப்பட்ட நாள் November 21, 2016.
  10. "Pakistani mountaineer Hassan Sadpara dies after battle with cancer". Dunya News tv. November 21, 2016. பார்க்கப்பட்ட நாள் November 21, 2016.
  11. "Pakistani Mount Everest Climber Hassan Sadpara Diagnosed with Cancer". GBee News. 2016-11-08. Archived from the original on 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  12. "Pakistani Mountaineer Hassan Sadpara Passes Away of Cancer at 54". GBee News. 2016-11-21. Archived from the original on 2016-11-22. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  13. Hassan Sadpara, Death. "Pakistani Mountaineer Hassan Sadpara dies after battle with cancer". www.skardu.pk. Skardu.pk. Archived from the original on 24 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016.
  14. "Mountaineer laid to rest in Skardu". Dawn News. November 23, 2016. பார்க்கப்பட்ட நாள் November 23, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசன்_சத்பாரா&oldid=3682678" இலிருந்து மீள்விக்கப்பட்டது