அசர்பைஜானில் போக்குவரத்து

அசர்பைஜானில் போக்குவரத்து வான்வழி, தரைவழி, இருப்புவழி, நீர்வழி ஆகியவற்றை உள்ளடக்கியது. எண்ணெய், வாயுக்களுக்கான குழாய்த் தடங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும், அசர்பைஜானில் போக்குவரத்துத் துறைக்கு உட்பட்டவை.[1]

அசர்பைஜானில் Azerbaijan geopolitical map with rail and road network

இருப்புவழி

தொகு
 
அசர்பைஜான் இருப்புவழியின் வரைபடம்

2,932 km (1,822 mi) நீளத்தில் உள்ள இருப்புப்பாதையில் 2,117 km (1,315 mi) நீளத்துக்கு உட்பட்ட இருப்புப்பாதை மட்டும் பொதுமக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 810 km (500 mi) நீளத்தில் அமைந்த இருப்புப்பாதை தொழிற்துறைக்குப் பயன்படுத்தப்படுகிறது.[2]

2,932 km (1,822 mi) வழித்தடத்தில் 72% வழித்தடம் ஒற்றை வழியைக் கொண்டது. 28% வழித்தடம் இருபக்கமும் போய் வரும் வசதி கொண்டது.[2]

மொத்த நீளத்தில் 43% வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது.[2]

ரயில்வேயில் மொத்தம் 176 நிறுத்தங்கள் உள்ளன. மூன்று நிலையங்களில் சரக்குப் போக்குவரத்தும் நடத்தப்படுகிறது.

ரஷ்யா, ஜியார்ஜியா, இரான், துருக்கி, ஆர்மீனியா ஆகிய அண்டை நாடுகளுடனும் இருப்புப் பாதைகள் இணைக்கப்பட்டுள்ளன

மெட்ரோ

தொகு

அசர்பைஜானில் விரைவுப் போக்குவரத்து வசதிகள் பக்கூவில் உள்ளன. பக்கூ மெட்ரோவின் மூலம் பக்கூ நகரத்தில் உள்ளூர் போக்குவரத்து மேம்பட்டு உள்ளது. அசர்பைஜானின் ஏனைய நகரங்களான சுங்கையிட், நக்சிவான், காஞ்சா ஆகிய நகரங்களிலும் இத்தகைய வசதிகள் வரவிருக்கின்றன. [3]

சாலைவழி

தொகு
 
அசர்பைஜான், சியார்சியா ஆகிய நாடுகளின் எல்லை, பாலாக்கான்

அசர்பைஜானில் 25,000 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. பாகு, அலாட், காஞ்சா, கசக் ஆகிய நகரங்களின் வழியாக நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. ஜியார்ஜியா, ரஷ்யா, இரான் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லைகள் வழியாக போடப்பட்டுள்ள சாலைகளின் மூலம் அந்நாட்டுப் பொருட்களை மற்ற நாட்டுகளுக்கும், மற்ற நாட்டுப் பொருட்களை அந்நாட்டுக்கும் கொண்டு செல்கின்றனர்.

குழாய்கள்

தொகு

பக்கூவில் இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு குழாய்கள் வழியாக எண்ணெயும், வாயுக்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. வாயுக்குழாய்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

துறைமுகங்கள்

தொகு
 
பாகு துறைமுகம்

ஈரான், கசக்ஸ்தான், உருசியா, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நீர்வழிப் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நீர்வழியாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்கின்றனர்.

காசுப்பியன் கடலை ஒட்டிய துறைமுகங்களில் பாகு துறைமுகம் பெரியது. இங்கு ஆண்டு தோறும், 30 மில்லியன் டன் எடையுள்ள பொருட்களை கையாள முடியும். 2014இல், காசுப்பியன் கடலின் வழியான போக்குவரத்தை எளிமைப்படுத்தவிருப்பதாக அசர்பைஜான் அரசு தெரிவித்தது.[4]

நீர்வழிப் போக்குவரத்துக்கான நிர்வாக அமைப்பு போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் போக்குவரத்து கொள்கைகளை தீர்மானிப்பது, திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும். பாகு தவிர லெங்கோரான், துபண்டி ஆகிய இடங்களிலும் துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

தொகு
 
ஹைதர் அலியேவ் பன்னாட்டு வானூர்தி நிலையம், பாக்கு

அசர்பைஜானில் இருந்து முற்கால சோவியத் நாடுகளுக்கும், ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, பிரான்சு, ஆஸ்திரியா, இத்தாலி, இசுரேல், ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடு, சீன மக்கள் குடியரசு, ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு வானூர்திகள் இயக்கப்படுகின்றன. சரக்குப் போக்குவரத்துக்கான வானூர்திகள் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, லக்சம்பர்க், ஜெர்மனி, சீன மக்கள் குடியரசு, கிர்கிசுத்தான், ஆப்கானித்தான், ஈராக் ஆகிய நாடுகளுக்கு சென்று வருகின்றன. அரசின் சார்பில் வான்வழிப் போக்குவரத்தை ஆசர்பைசான் வான்சேவை நிறுவனம் மேற்கொள்கிறது. பாகு, கஞ்சா, நக்சிவான், லெங்காரான், சகதலா ஆகிய ஐந்து நகரங்களில் பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. பாகுவில் உள்ள ஹைதர் அலியேவ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் மணிக்கு 1,600 பேர் இருக்க முடியும். நாட்டில் மொத்தம் 37 வானூர்தி நிலையங்கள் உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. "World Investment News. V.I.P. Interviews. H.E. Mr. Ziya Mamedov". பார்க்கப்பட்ட நாள் 2010-11-18.
  2. 2.0 2.1 2.2 "Azerbaijan Railways". Indexmundi. 2009-12-19. http://www.indexmundi.com/azerbaijan/railways.html. பார்த்த நாள்: 2007-11-01. 
  3. "Good news for Baku Metro's users". azernews. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  4. "Joint venture of Azerbaijan and Turkey to operate transport on Caspian Sea". 12 January 2015. http://vestnikkavkaza.net/news/economy/64527.html. பார்த்த நாள்: 15 January 2015. 

இணைப்புகள்

தொகு