அசாமின் பட்டியல் பழங்குடியினர்

இந்தியாவின் அசாம் மாநில இனக்குழுவினர்

அசாமின் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes of Assam) 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மாநில மக்கள்தொகையில் 12.4 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் என அறியப்படுகிறது. [1] அசாம் ட்ரிப்யூன் என்ற ஆங்கில தினசரி 2009 ஆம் ஆண்டில் அசாமின் பழங்குடி சமூகங்கள் மொத்த மக்கள்தொகையில் 15.64 சதவிகிதம் என்றும் தெரிவித்துள்ளது. [2]

இந்திய அரசியலமைப்பு அசாமின் பழங்குடியினரை இரண்டு குழுக்களாக வகைப்படுத்துகிறது: மலைப்பகுதி பட்டியல் பழங்குடியினர் மற்றும் சமவெளிப்பகுதி பட்டியல் பழங்குடியினர் [2] என்பன இவ்விருவகை குழுக்களாகும். சமவெளிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியினரும், மலைகளில் அதிக எண்ணிக்கையில் வாழும் சமவெளிப் பழங்குடியினரும் அந்தந்த இடங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினராக அங்கீகரிக்கப்படாததால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் சரியான புள்ளிவிவரங்களைப் பிரதிபலிக்காமல் இருக்கலாம். [2] அசாமிய மொழி கிட்டத்தட்ட அனைத்து பழங்குடியினராலும் ஓர் இணைப்புமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. [2]

குழுக்கள்

தொகு

முக்கிய பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (சமவெளி) இனத்தில் போடோ, [3] தியோரி, [4] சோனோவால், மிசிங், [5] மற்றும் அசோங்கு ஆகியவை அடங்கும். [6] கர்பி மற்றும் திமாசா மக்கள் பட்டியல் பழங்குடியினர் (மலைகள்) இன தகுதியைப் பெற்றுள்ளனர்.

பழங்குடியினர் பட்டியல்

தொகு

கர்பி ஆங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைகளின் தன்னாட்சி மாவட்டங்களில்

தொகு

அசாம் மாநிலத்தில் கர்பி ஆங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைகளைத் தவிர்த்து

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Data highlights: The Scheduled Tribes" (PDF). censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 "The Scheduled Tribes of Assam". Assam Tribune. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.
  3. "Bodo | people".
  4. "Deori Tribe in India".
  5. "About".
  6. About. 14 May 2015.