அசீநாப்தைலீன்

அசீநாப்தைலீன் (Acenaphthylene) என்பது C12H8 என்ற வேதிவாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமம் ஆகும். அசீநாப்தைலீனின் மூலக்கூற்று அமைப்பு 1 மற்றும் 8 நிலைகளில் C2H2 அலகு இணைக்கப்பட்ட நாப்தலீனின் அமைப்பை ஒத்திருக்கிறது. மஞ்சள் நிறத்தில் திண்மமாக இருக்கும் இச்சேர்மம் மற்ற பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களைப் போல ஒளிர் தன்மையற்று காணப்படுகிறது.

அசீநாப்தைலீன்
Acenaphthylene
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசீநாப்தைலீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவளைய[6.3.1.04,12]தோதெக்கா-1(12),2,4,6,8,10-எக்சேன்
வேறு பெயர்கள்
வளையபெண்டா[டி]நாப்தலீன், அசீநாப்தலீன்
இனங்காட்டிகள்
208-96-8 Y
ChEBI CHEBI:33081 Y
ChemSpider 8807 Y
InChI
  • InChI=1S/C12H8/c1-3-9-4-2-6-11-8-7-10(5-1)12(9)11/h1-8H Y
    Key: HXGDTGSAIMULJN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C12H8/c1-3-9-4-2-6-11-8-7-10(5-1)12(9)11/h1-8H
    Key: HXGDTGSAIMULJN-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 9161
  • c3cc1cccc2\C=C/c(c12)c3
  • c1cc2cccc3c2c(c1)C=C3
UNII 1Z25C36811 Y
பண்புகள்
C12H8
வாய்ப்பாட்டு எடை 152.20 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
அடர்த்தி 0.8987 கி செ.மீ−3
உருகுநிலை 91.8 °C (197.2 °F; 364.9 K)
கொதிநிலை 280 °C (536 °F; 553 K)
கரையாது
எத்தனால்-இல் கரைதிறன் நன்கு கரையும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் நன்கு கரையும்
பென்சீன்-இல் கரைதிறன் நன்கு கரையும்
குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் கரையும்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22 R36 R37 R38
S-சொற்றொடர்கள் S26 S36 S37 S39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தோற்றம்

தொகு

நிலக்கரித் தாரில் 2% அளவுக்கு அசீநாப்தைலீன் காணப்படுகிறது. அசீநாப்தீனை ஐதரசன் நீக்கம் செய்யும் வினையின் மூலம் தொழிற்துறையில் அசீநாப்தைலீன் தயாரிக்கப்படுகிறது[1]. அண்டத்தில் காணப்படும் 20% அளவுக்கு மேலான கார்பன், பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்களில் இருந்தே கிடைக்கிறது[2].

வினைகள்

தொகு

அசீநாப்தைலீனனை ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்துவதால் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமான அசீநாப்தீன் உருவாகிறது. சில கரிமவுலோக சேர்மங்களுக்கு இச்சேர்மம் ஒரு ஈதல் தொகுதியாகச் செயல்படுகிறது[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Karl Griesbaum, Arno Behr, Dieter Biedenkapp, Heinz-Werner Voges, Dorothea Garbe, Christian Paetz, Gerd Collin, Dieter Mayer, Hartmut Höke “Hydrocarbons” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_227
  2. Hoover, Rachel (February 21, 2014). "Need to Track Organic Nano-Particles Across the Universe? NASA's Got an App for That". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 22, 2014.
  3. Yukihiro Motoyama; Chikara Itonaga; Toshiki Ishida; Mikihiro Takasaki; Hideo Nagashima (1925). "Catalytic Reduction of Amides to Amines with Hydrosilanes Using a Triruthenium Cluster as the Catalyst". Organic Syntheses 82: 188. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV11P001. ; Collective Volume, vol. 11, p. 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீநாப்தைலீன்&oldid=2765966" இலிருந்து மீள்விக்கப்பட்டது