அச்சங்குன்றம்
அச்சங்குன்றம் (Achankuttam) தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம் புதூர் வட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
அச்சங்குன்றம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627861 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது திருநெல்வேலியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 639 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகுஇந்த கிராமத்தில் 1047 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4072 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2015 (49.5 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2057 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 72.9 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]
தொழில்கள்
தொகுஇக்கிராமத்தினர் பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றார்கள். வேளாண்மையை முக்கிய தொழிலாகவும், கட்டிடம் கட்டுதல், வியாபார வர்த்தக விற்பனை மற்றும் மர வேலைப்பாடுகள் செய்தல் போன்ற பிற தொழில்களையும் செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களும் பிற பொருள்களும் அருகிலுள்ள நகரப் பகுதிகளான சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கோயில்கள்
தொகுஇந்த ஊரில் முத்தாரம்மன் கோவில், காளியம்மன் கோவில், மாட சுவாமி கோவில், கருப்பசுவாமி கோவில் பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Achankuttam Village".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)