அச்சல்வாடி
அச்சல்வாடி (Achalvadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் அச்சல்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அச்சல்வாடி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 45 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 261 கிலோமீடர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'13.2"N 78°29'41.8"E[2]
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 808 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2907 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1471 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1436 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 66.2 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.