அச்செழு

அச்செழு, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்குத் தெற்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 5.5 கிமீ தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 13 கிமீ. இவ்வூரைச் சுற்றிலும், புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சிறுப்பிட்டி, நீர்வேலி, உரும்பிராய் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.

நிறுவனங்கள்தொகு

இவ்வூரில், முதலாம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களைக் கொண்ட அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், ஒன்று தொடக்கம் ஐந்தாம் ஆண்டுவரை வகுப்புக்களைக் கொண்ட அச்செழு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.
  2. "வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு இணையத்தளம் - பாடசாலைகள்". 2017-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-17 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்செழு&oldid=3431238" இருந்து மீள்விக்கப்பட்டது