அஜய் போங்கர்
அசய் போங்கர் (Ajay Pohankar) (பிறப்பு: பிப்ரவரி 24, 1947) இந்துத்தானி இசையின் கிரானா கரானா பள்ளியைச் சேர்ந்த பாடகராவார். [1] [2]
பண்டிட் அசய் போங்கர் | |
---|---|
பிறப்பு | 24 பெப்ரவரி 1947 |
பிறப்பிடம் | ஜபல்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, கிரானா கரானா |
தொழில்(கள்) | இந்திய பாரம்பரிய இசை பாடுதல் |
இணையதளம் | www |
பின்னணியும், தொழிலும்
தொகுஅசய் போங்கர் மத்திய பிரதேசத்தின் சபல்பூரில் ஒரு மராத்தி தேசத்தா பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞராக இருந்தார். பாடகரும், கிரானா கரானாவின் இசைக்கலைஞருமான இவரது தாயார் சுசிலாபாய் இவருக்கு முதல் குருவாக இருந்தார். தனது இளம் வயதில், புனேவில், நடக்கும் சவாய் கந்தர்வ இசை விழாவின் வருடாந்திர நிகழ்ச்சியை நடத்த அழைக்கப்பட்டார். [3] இலண்டனில் வசிக்கும் இவரது சகோதரி சுவாதி நடேகரும் ஒரு பாடகராவார்.
இவர், ஒரு பாடகரும் இசைக்கலைஞருமான அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அஞ்சலி தும்ரி பற்றிய புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர்களுக்கு அபிசித் போங்கர் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவரும் இந்திய பாரம்பரிய இசையில் விசைப்பலகைக் கலைஞராகவும், இணைவு இசையமைப்பாளராகவும், இசைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். [4]
விருதுகளும், கௌரவங்களும்
தொகு2009ஆம் ஆண்டில், இவருக்கு மத்தியப் பிரதேச அரசு தான்சேன் சம்மான் விருதினை வழங்கியது 2012ஆம் ஆண்டில், இந்தியாவின் சங்கீத நாடக அகாதமியால் வழங்கப்படும் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. [5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ajay Pohankar concert". The Hindu (Chennai, India). 9 November 2010 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101113052623/http://www.hindu.com/2010/11/09/stories/2010110955320200.htm. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ "Sitara, Keka to perform in Mumbai". The Times of India. 8 March 2011 இம் மூலத்தில் இருந்து 2012-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120323185449/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-08/music-events/28667922_1_sitara-devi-music-and-dance-ajay-pohankar. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-23. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
- ↑ Samhita Barooah. "Five decades of uncompromised music". பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.
- ↑ "Archived copy". Archived from the original on 21 September 2012. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Sangeet Natak Akademi Fellowships and Akademi Awards 2012" (PDF). Press Information Bureau, Govt of India. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
- ↑ "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 2015-05-30.