அஞ்சலி மராத்தே
அஞ்சலி மராத்தே (Anjali Marathe) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகி மற்றும் இந்துஸ்தானி பாடகர் ஆவார்.
அஞ்சலி மராத்தே Anjali Marathe | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
இசை வடிவங்கள் | மராத்தி பாடல், இந்தி பாடல் |
இணைந்த செயற்பாடுகள் | சசீல் குல்கர்ணி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅஞ்சலி தனது தாயார் அனுராதா மராத்தேவிடம் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். இவர் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய மற்றும் மெல்லிசைப் பாடகர் மற்றும் மராத்தி மற்றும் இந்திப் பாடல்களின் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
தொழில்
தொகுஅஞ்சலி, ஒரு உளவியல் பட்டதாரி. இவர் மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் XI-ல் இவர் இசை மீது நாட்டம் கொண்டார்.[1] 1996ஆம் ஆண்டு தனது 16வது வயதில் மராத்தி திரைப்படமான தோகியில் ஒரு பாடலை பாடியதற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் தனது ஒன்பது வயதிலேயே சௌகத் ராஜா (மராத்தி), சாய்பாபா (மராத்தி), டோகி (மராத்தி) மற்றும் தொடருக்கான தலைப்புப் பாடல்கள் - ஜுதே சச்சே குடே பச்சே (இந்தி), ஓலக் சங்கனா (மராத்தி) ஆகியவற்றுக்கான பாடல்களைப் பாடினார். அனைத்திந்திய வானொலி புனேயில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் (பலோடியனுக்காக) பாடல்களைப் பதிவு செய்தார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மும்பையில் ஜக்திக் மராத்தி பரிஷத்தில் நடைபெற்ற ஸ்மரணயாத்திரையில் இவர் பங்கேற்றார். அஞ்சலி குழந்தைகளுக்கான சிமாங்கனி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அஞ்சலி, இந்த நிகழ்ச்சிகளைத் தவிர, சொற்பொழிவு, நடனம், நாடகம் மற்றும் தெரு நாடகங்களிலும் பங்கேற்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅஞ்சலி பாடகி அனுராதா மராத்தேவின் மகள் ஆவார். அஞ்சலி, சலீல் குல்கர்னியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் - குழந்தைகள் திரைப்படமான 'சிண்டூ' (चिंटू) க்காக பாடிய மகன் சுபங்கர் மற்றும் மகள் அனன்யா.
மேற்கோள்கள்
தொகு- ↑ "In the genes" பரணிடப்பட்டது 1 மே 2005 at the வந்தவழி இயந்திரம். The Indian Express. 20 April 2005. Retrieved 1 June 2011.