அதனா
அதனா (Adana, pronounced [aˈda.na]; ஆர்மீனியம்: Ադանա; பண்டைக் கிரேக்கம்: Άδανα) தெற்கு துருக்கியிலிலுள்ள முதன்மையான நகரம். இந்த நகரம் தென்மத்திய அனத்தோலியாவில் செய்கன் ஆற்றங்கரையில் நடுநிலக் கடலிலிருந்து 35 கிமீ (22 மை) தொலைவில் உள்நாட்டில் அமைந்துள்ளது. அதனா மாகாணத்தின் நிர்வாகத் தலைநகரமாகவுள்ள அதனாவின் மக்கள்தொகை 1.7 மில்லியன்.[2] இது துருக்கியின் 5வது மிகுந்த மக்கள்தொகையுள்ள நகரமாக விளங்குகிறது. அதனா-மெர்சின் பன்மையப் பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 3 மில்லியன் ஆகும். அதனா, மெர்சின்,டார்சசு நகரங்களை உள்ளடக்கிய இந்த பெருநகரப் பகுதி கிழக்கு-மேற்காக 70 கிமீ (43 மை) அகலமும் வடக்கு-தெற்காக 25 கிமீ (16 மை) நீளமும் கொண்டுள்ளது.
அதனா | |
---|---|
பெருநகர நகராட்சி | |
ஆள்கூறுகள்: 37°0′N 35°19.28′E / 37.000°N 35.32133°E | |
நாடு | துருக்கி |
வலயம் | நடுநிலக் கடல் வலயம் |
மாகாணம் | அதனா |
நிறுவல் | பொ.யு.மு 6000 (8024 ஆண்டுகள் முன்பு) |
ஒருங்கிணைக்கப்பட்டது | 1871 (153 ஆண்டுகள் முன்பு) |
மாவட்டங்கள் | செய்கன், யுரெகிர், சுகுரோவா, சரிசம் |
அரசு | |
• வகை | மேயர்-மன்றம் அரசு |
• நிர்வாகம் | அதனா பெருநகர நகராட்சி |
• மேயர் | உசையின் சோசுலு (தேசிய இயக்கக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,945 km2 (751 sq mi) |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2017)[1] | 17,53,337 |
• அடர்த்தி | 892.83/km2 (2,312.4/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (தொலைகிழக்கு ஐரோப்பிய நேரம்) |
அஞ்சல் குறியீடு | 01xxx |
இடக் குறியீடு | 0322 |
தானுந்து எண்பலகை | 01 |
இணையதளம் | www www |
அதனா சிலிசியா எனப்படும் புவி-பண்பாட்டு வலயத்தின் மையத்தில் உள்ளது; இப்பகுதி தற்போது சுகுரோவா என அறியப்படுகின்றது. ஆறு மில்லியன் மக்கள் வாழும்,[2] சிலிசியா துருக்கியின் மிகப்பெரும் மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். சமவெளியான, வண்டல் பூமியாதலால் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகின்றது. இப்பகுதியில் அதனா மாகாணம், மெர்சின் மாகாணம், ஓசுமானியெ மாகாணம், அதாய் மாகாணங்கள் அடங்கியுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 4 February 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ 2.0 2.1 "Archived copy". Archived from the original on 4 February 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
தொகு- Governorship of Adana
- Municipality of Adana பரணிடப்பட்டது 2010-03-01 at the வந்தவழி இயந்திரம்