அதியமான் கோட்டை (ஊர்)
அதியமான் கோட்டை (Adiyamankottai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரில் ஒரு காலத்தில் அதியமான் கோட்டை இருந்ததால் கோட்டையில் பெயரிலேயே ஊரும் அழைக்கப்படுகிறது.
அதியமான் கோட்டை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636807 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 298 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2410 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 9610 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4670 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4940 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 67.0 %ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.