அத்தி திருவண்ணாமலை

அத்தி (pronunciation) (ஆங்கிலம்: Athi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செய்யாறு வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.

அத்தி
அத்தி
இருப்பிடம்: அத்தி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°38′54″N 79°37′24″E / 12.6482107°N 79.6234131°E / 12.6482107; 79.6234131
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 798 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


343 மீட்டர்கள் (1,125 அடி)

குறியீடுகள்

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°38′54″N 79°37′24″E / 12.6482107°N 79.6234131°E / 12.6482107; 79.6234131 ஆகும். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பெருநகர் எனும் ஊர் (காஞ்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவு). பெருநகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம்.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 798 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். அத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 48.2% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59.7%, பெண்களின் கல்வியறிவு 40.2% ஆகும். அத்தி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அருள்மிகு அத்தீஸ்வரர் கோவில் தொகு

அத்தீஸ்வரர் கோவில் சோழர் காலத்து பழமையான சிவன் கோவில். இது ஓர் தேவார வைப்புத் தலமாகும்.

போக்குவரத்து தொகு

சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட்டுச்சாலை (மானாம்பதி கூட்டு ரோடு) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட்டுச்சாலை (மானாம்பதி கூட்டு ரோடு)-இல் இருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தி_திருவண்ணாமலை&oldid=3752353" இலிருந்து மீள்விக்கப்பட்டது