அத்தையா மாமியா

அத்தையா மாமியா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, சச்சு, எம்.பானுமதி, சுகுமாரி, காந்திமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அத்தையா மாமியா
இயக்கம்கோபு
தயாரிப்புஎன். ஆர். அமுதா
கருடா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
உஷா நந்தினி
வெளியீடுஆகத்து 15, 1974
நீளம்3936 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு இளைஞன் ஊருக்கு வருகிறான். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து சேர்கிறார். அதேசமயம் அவனது மாமியின் குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து சேர்கின்றனர். இந்த அமெரிக்க மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்கிறான். இந்நிலையில் இந்த மாப்பிள்ளை தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளே கதையாகும்.

மேற்கோள்கள்தொகு

  1. டி.ஏ.நரசிம்மன் (2018 நவம்பர் 30). "கடத்தப்பட்ட எழுத்தாளர்!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 2 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தையா_மாமியா&oldid=2608544" இருந்து மீள்விக்கப்பட்டது