எம். பானுமதி (நடிகை)

தென்னிந்திய நடிகை

எம். பானுமதி (1946 - 4 பிப்ரவரி 2013) இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார், எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர், தமிழ் திரையுலகில் 1970 முதல் 85 வரையிலான காலகட்டத்தில் மிகுந்த ஆதிக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்த நூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2]

எம். பானுமதி
பிறப்பு1946 (1946)
இறப்பு4 பெப்ரவரி 2013(2013-02-04) (அகவை 66–67)
தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
பணிநடிகை, பாரம்பரிய நடனம்
செயற்பாட்டுக்
காலம்
1965 - 2013
பிள்ளைகள்வெங்கடலட்சுமி (மகள்)
உறவினர்கள்வழுவூர் பி. இராமையா பிள்ளை
விருதுகள்கலைமாமணி விருது

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் சாலையில் பானுமதி தனது ஒரே மகள் வெங்கடலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.[3] மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த இவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் 4 பிப்ரவரி 2013 அன்று 67 வயதில் மரணித்தார்.[4]

மற்ற படைப்புகள்

தொகு

பானுமதி, சிவாஜி கணேசனுடன் இணைந்து சிவாஜி நாடக மன்றம் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனின் என்எஸ்என் அரங்கு போன்ற நாடக சபாக்களில் பங்கேற்று நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்தபடி, அச்சானி, அப்பாவி, டெல்லி மாப்பிள்ளை, ஜஹாங்கீர், காலம் கண்ட கவிஞன், நீதியின் நிழல், வியட்நாம் வீடு , வேங்கையின் மைந்தன் மற்றும் சொந்தம் போன்ற அனைத்து வெற்றி பெற்ற நாடகங்களிலும், பிரபலமான திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு இணையாக காணப்பட்டுள்ளார் , மேலும் பானுமதி, சோ, ஜெய்சங்கர், வி. கோபாலகிருட்டிணன், வி. எஸ். ராகவன் மற்றும் ஷேசாத்ரி போன்ற நடிகர்களுடன் இணைந்து நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படப்பெயர் பாத்திரப்பெயர் மொழி  
1965 நீ சிறப்பு வேடம் தமிழ் [5]
1966 குமரிப் பெண் தமிழ்
1968 பூவும் பொட்டும் கமலா தமிழ்
1968 தில்லானா மோகனாம்பாள் செவிலியர் மேரி தமிழ்
1968 திருமால் பெருமை லட்சுமி (இந்துக் கடவுள்) தமிழ்
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ் நாட்டிய கலைஞர் தமிழ்
1969 அக்கா தங்கை பானுமதி தமிழ் [6]
1969 அன்னையும் பிதாவும் தமிழ்
1969 தெய்வமகன் நிர்மலாவின் சினேகிதி தமிழ்
1969 நிறைகுடம் தமிழ்
1969 துலாபாரம் நாட்டிய கலைஞர் தமிழ்
1970 சி. ஐ. டி. சங்கர் சுஜாதா ராணி தமிழ்
1970 எங்கிருந்தோ வந்தாள் மோகனா தமிழ்
1970 காதல் ஜோதி தமிழ்
1970 நிழலாட்டம் மாதவி மலையாளம் [7]
1970 ராமன் எத்தனை ராமனடி சுமதி தமிழ்
1970 சொர்க்கம் தமிழ்
1970 வியட்நாம் வீடு சுமதி தமிழ்
1971 திருமகள் பானு தமிழ்
1972 அகத்தியர் காக்கை பாடினியார் தமிழ்
1972 இதோ எந்தன் தெய்வம் தமிழ்
1972 என்ன முதலாளி சௌக்கியமா தமிழ்
1972 திருநீலகண்டர் கலாவதி தமிழ்
1972 ஆசிர்வாதம் தமிழ்
1973 கோமாதா என் குலமாதா Mohana தமிழ்
1973 வள்ளி தெய்வானை தமிழ்
1974 பெண் ஒன்று கண்டேன் தமிழ்
1974 அத்தையா மாமியா சந்திரா தமிழ்
1974 ஒரே சாட்சி தமிழ் [8]
1974 சமையல்காரன் தமிழ்
1974 டைகர் தாத்தாச்சாரி தமிழ்
1975 மனிதனும் தெய்வமாகலாம் தமிழ்
1975 வாழ்ந்து காட்டுகிறேன் லட்சுமி தமிழ்
1976 வாழ்வு என் பக்கம் பிரியா தமிழ்
1977 அவன் ஒரு சரித்திரம் தமிழ்
1977 முருகன் அடிமை தமிழ்
1981 கடவுளின் தீர்ப்பு தமிழ்
1987 கூட்டுப் புழுக்கள் தமிழ்
1990 கீதாஞ்சலி மலையாளம்
1992 தம்பி பொண்டாட்டி தமிழ்
2011 சகாக்கள் தேவசேனாவின் பாட்டி தமிழ்

மேடை நாடகங்கள்

தொகு
  • அச்சானி
  • அப்பாவி [4]
  • டெல்லி மாப்பிள்ளை [4]
  • ஜஹாங்கீர் [1]
  • நீதியின் நிழல் [1]
  • காலம் கண்ட கவிங்கன் [1]
  • சொந்தம் [4]
  • வேங்கையின் மைந்தன் [1]
  • வியட்நாம் வீடு [1]

தொலைக்காட்சி தொடர்கள்

தொகு

இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் பானுமதி  நடித்துள்ளார்

ஆண்டு பெயர் பங்கு குறிப்பு
2000-2001 ரமணி VS ரமணி இரண்டாம் பாகம் திருமதி. ரமணியின் தாய் பழம்பெரும் இயக்குனர் கே பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் தயாரித்து, ராஜ் டிவியில் ஒளிபரப்பானது [9]
2001-2003 அன்னி வள்ளியம்மை சன் டி.வி [10]
2003-2005 ஆடுகிரான் கண்ணன் சன் தொலைக்காட்சி
2006-2008 செல்லமாடி நீ எனக்கு சன் தொலைக்காட்சி
2007-2010 மேகலா திலகவதியின் தாய் சன் தொலைக்காட்சி
2008 திருப்பாவை
2010 அனுபல்லவி சன் தொலைக்காட்சி
2012 வெள்ளை தாமரை சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ashok Kumar, S. R. (29 January 2013). "Grill Mill - M. Bhanumathi". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  2. "அன்று கண்ட முகம் - எம். பானுமதி". antrukandamugam.worpress. 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". www.tamilstar.org. Archived from the original on 2019-05-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-13.
  4. 4.0 4.1 4.2 4.3 Rangarajan, Malathy (25 April 2013). "Noted in Life Unnoticed in Death". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 May 2019.
  5. "Nee!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 21 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650821&printsec=frontpage&hl=en. 
  6. Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). p. 738.
  7. "Nizhalattam (1970)". தி இந்து. 6 October 2013.
  8. "Ore Satchi".
  9. "Ramani vs Ramani Part II". YouTube (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  10. "Small-screen "Anni" thinks big". தி இந்து. 2003-05-12. Archived from the original on 2003-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பானுமதி_(நடிகை)&oldid=4114557" இலிருந்து மீள்விக்கப்பட்டது