அந்தி வரும் நேரம்

அந்தி வரும் நேரம் 1990 ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. சம்ப்த் தயாரிப்பில், ஆர். ரமேஷ்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நிழல்கள் ரவி, ரமா, லதா, சாதனா, விஜி, கோகிலா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வசனம் எழுதியவர் கனக சண்முகம். இசை சங்கர் கணேஷ் ஆவார்.[1]

அந்தி வரும் நேரம்
இயக்கம்ஆர். ரமேஷ் குமார்
தயாரிப்புஜி. சம்பத்
ஜி.எஸ். புரொடக்ஷன்ஸ்
கதைஜி. சம்பத்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநிழல்கள் ரவி
லதா
ஒளிப்பதிவுகே.பி.அகமது
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேய்ப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சாந்தி என்னும் கிராமத்து பெண் நகரத்தில் உள்ள கல்லூரியில் பயில வருகிறாள். அங்கேயுள்ள பெண்கள் விடுதியில் தங்குகிறாள். நகரத்து நாகரிகம் அறியாத சாந்தியை அந்த விடுதியில் உள்ள மாணவிகள் கேலி கிண்டல் செய்கிறார்கள். சந்தர்ப்பங்களில் அவள் சந்திக்கும் மருத்துவர் (நிழல்கள் ரவி) மீது சாந்தி காதல் கொள்கிறாள். மனதாலும் உடலாலும் துன்புறுத்தப்படும் சாந்தி அப்பெண்களின் நண்பன் ஒருவனால் மாடியில் இருந்து விழுந்து விடுகிறாள். கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாந்தி மரணத்துக்கும் வாழ்வுக்கும் நடுவில் போராடுகிறாள். இந்நிலையில் அவளை துன்புறுத்திய மாணவிகள் மர்மமாக இறக்கிறார்கள். அவர்களைக் கொன்றது சாந்தியின் ஆவி என்று மருத்துவர் ரவி கண்டுபிடிக்கிறார். ரவியையும் சாவில் தன்னுடன் இணையுமாறு சாந்தி சொல்கிறாள். ரவியை மணக்க உள்ள லதா ரவியை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். இறுதியில் சாந்தியின் பெற்ற தாய் வந்து அவளிடம் கேட்டுக்கொள்ள சாந்தியின் ஆவி ரவியைத் தொடரமாட்டேன் என்று சொல்லி விடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-303. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தி_வரும்_நேரம்&oldid=4122591" இலிருந்து மீள்விக்கப்பட்டது