அனங்கனடி
அனங்கனடி (Ananganadi) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] அனங்கனடியின் தெற்கே உள்ள ஒற்றப்பாலம் மற்றும் வடக்கே உள்ள செர்புளச்சேரி ஆகிய நகரங்களிலிருந்து சம தொலைவில் 10 கி.மீ தொலைவில் அனங்கனடி அமைந்துள்ளது. வாணியங்குளம் கிராமம் தென்மேற்கே தோராயமாக 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
அனங்கனடி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°50′0″N 76°20′0″E / 10.83333°N 76.33333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 22,078 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 6XXXXX |
வாகனப் பதிவு | KL- |
இந்த ஊர் அனங்கன் மலைகளின் கீழ் அமைந்துள்ளதால், அனங்கனடி என்ற பெயர் பெற்றது. அனங்கன்மலா என்று பிரபலமாக அறியப்படும் அனங்கன் மலைகள், 2500 ஏக்கர் பரப்பளவில் பாறைகள் நிறைந்த பசுமையான காடுகளுடன், பல்வேறு வனவிலங்குகளுடன் உள்ளது. இது வடக்கு-தெற்கே சுமார் 20 கி.மீ நீளம் வரை நீண்டுள்ளது. மேலும் அதன் மிக உயர்ந்த இடமானது சுமார் 1200 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. அனங்கன் மலைப்பகுதியில் கேரள வனத்துறையால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உள்ளது.[2]
சேரம்பேட்டை பகவதி கோயில், பட்டர்கோணம் சிவன் கோயில் ஆகியவை அனங்கனடி கிராமத்தில் உள்ள இரண்டு மிகப் பழமையான கோவில்களாகும்.
1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அனங்கனடி உயர்நிலைப்பள்ளி கிராமத்தின் பழமையான மற்றும் ஒரே உயர்நிலைப் பள்ளியாகும்.
அனங்கனடி அதே பேரிலான கிராம ஊராட்சியைக் கொண்டுள்ளது. இது ஒற்றப்பாலம் வட்டத்தில் அமைந்துள்ளது.[3] பத்தம்குளத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.[4]
மக்கள்வைகைப்பாடு
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அனங்கனடியின் மக்கள் தொகை 22,078 ஆகும். இதில் 10,242 பேர் ஆண்கள், 11,836 பேர் பெண்கள்.[1] அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் (2011) கிராமத்தின் மக்கள் தொகை 24,445 உள்ளதாக காட்டுகின்றன, இந்த பதிவின்படி கிராமத்தில் உள்ள ஆண்கள் 11,386 பேர், பெண்கள் 13,059 பேர்களாவர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Ananganmala". Kerala Forest Eco Tourism. 15 October 2024. பார்க்கப்பட்ட நாள் 15 October 2024.
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.
- ↑ "Census of India, 2011 - Ananganadi Seed Farm" (PDF). Census of India, 2011. Archived from the original (PDF) on 17 July 2016.
- ↑ "Ananganadi Village Population - Ottappalam - Palakkad, Kerala" (PDF). www.censusindia.gov.in. Archived from the original (PDF) on 17 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.