அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan, பிறப்பு: செப்டம்பர் 10, 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியையும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.

அனந்தி சசிதரன்
Ananthi Sasitharan
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 24 அக்டோபர் 2018
இலங்கை, வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு அமைச்சர்
பதவியில்
ஜூன்.29. 2018 – 24 அக்டோபர் 2018
முன்னையவர்க. வி. விக்னேஸ்வரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 10, 1971 (1971-09-10) (அகவை 52)
குடியுரிமைஇலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்(2018 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (2018 வரை)
துணைவர்வேலாயுதம் சசிதரன் (எழிலன்)
தொழில்ஆசிரியை

ஆசிரியையான அனந்தி[1] தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார்.[2][3] எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது[4][5] ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார்.[6][7] ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார்.[8][9]

அரசியலில் தொகு

அனந்தி 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டு, இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் (87,870) பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[10][11] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[12][13][14] அனந்திக்கு 1வது வட மாகாண சபையில் சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையிடும் பணி வழங்கப்பட்டுள்ளது[15]

2018 அக்டோபர் 21 இல் இவர், தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்.[16][17]

தாக்குதல் தொகு

தேர்தல் பரப்புரைக் காலத்தில் இவருக்கு எதிராகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2013 செப்டம்பர் 11 இல் சுன்னாகத்திற்கு அருகில் இவர் பயணம் செய்த வாகனம் தாக்குதலுக்குள்ளானது.[18][19] 2013 செப்டம்பர் 19 இல் அனந்தியின் சுழிபுரம் இல்லத்தைச் சூழ்ந்து கொண்ட இராணுவ உடை தரித்த சுமார் 70 ஆயுதக்கும்பல் அவரது இல்லத்தை சேதப்படுத்தி, அவரது ஆதரவாளர்கள் பலரைத் தாக்கிக் காயப்படுத்தினர். இத்தாக்குதலில் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் காயமடைந்தார்.[20][21][22]

மீண்டும் அரசுப் பணியில் தொகு

தற்போது அனந்தி சசிதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீண்டும் முகாமைத்துவ உதவியாளராக இணைந்து பணியாற்றி வருகிறார்.[23]

மேற்கோள்கள் தொகு

  1. Karthick, S. (20 செப்டம்பர் 2013). "Ex-LTTE men lay down arms to join poll battle". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005064117/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-20/south-asia/42251944_1_kilinochchi-ltte-dua. 
  2. "UN's Navi Pillay visits Sri Lanka former war zone". பிபிசி. 27 ஆகத்து 2013. http://www.bbc.co.uk/news/world-asia-23856164. 
  3. "Ananthi to brief Pillay about the disappeared". சிலோன் டுடே. 19 ஆகத்து 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014224014/http://www.ceylontoday.lk/51-40489-news-detail-ananthi-to-brief-pillay-about-the-disappeared.html. 
  4. Haviland, Charles (20 செப். 2013). "Sri Lanka's Tamil community finally get provincial council vote". தி இன்டிபென்டென்ட். http://www.independent.co.uk/news/world/asia/sri-lankas-tamil-community-finally-get-provincial-council-vote-8830153.html. 
  5. "Relatives of Sri Lanka's Missing Vent Grievances at UN". வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா]]/ராய்ட்டர்ஸ். 27 ஆகத்து 2013. http://www.voanews.com/content/reu-sri-lanka-human-rights-pillay/1738336.html. 
  6. Natarajan, Swaminathan (24 செப்டம்பர் 2010). "Tamil Tiger's wife pleads for help in finding him". பிபிசி. http://www.bbc.co.uk/news/world-south-asia-11383437. 
  7. Wijedasa, Namini (1 செப்டம்பர் 2013). "Navi Pillay confronted with ‘missing’ stories, demos on 7-day visit". சண்டே டைம்ஸ். http://www.sundaytimes.lk/130901/news/navi-pillay-confronted-with-missing-stories-demos-on-7-day-visit-60456.html. 
  8. Bastians, Dharisha (30 செப். 2013). "TNA names councillors for bonus seats". Daily FT இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014030505/http://www.ft.lk/2013/09/30/tna-names-councillors-for-bonus-seats/. 
  9. Palakidnar, Ananth (28 ஆகத்து 2013). "Pillay meets families of the disappeared". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014224018/http://www.ceylontoday.lk/27-41179-news-detail-pillay-meets-families-of-the-disappeared.html. 
  10. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 7 அக்டோபர் 2013. 
  11. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  12. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  13. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  14. "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734. 
  15. அனந்தி, சர்வேஸ்வரன் உட்பட இன்னும் பலருக்கு வடமாகாண அமைச்சின் துறை சார் அதிகாரங்கள் பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், அக்டோபர் 17, 2013
  16. "புதிய கட்சியை ஆரம்பித்தார் அனந்தி". வீரகேசரி. 21 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2018.
  17. "தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க புதிய கழகம்" - அனந்தி சசிதரன்
  18. "TNA candidate Ananthi narrowly escapes attack in Jaffna". தமிழ்நெட். 11 செப்டம்பர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36640. 
  19. "TNA candidate attacked". சிலோன் டுடே. 12 செப்டம்பர்r 2013 இம் மூலத்தில் இருந்து 2015-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150610202430/http://www.ceylontoday.lk/16-42369-news-detail-tna-candidate-attacked.html. 
  20. "SL military attacks Ananthi's residence in Jaffna, 8 wounded". தமிழ்நெட். 19 செப்டம்பர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36673. 
  21. Aneez, Shihar (20 செப்டம்பர் 2013). "Sri Lankan polls monitor, party workers, attacked in north". ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927174646/http://www.reuters.com/article/2013/09/20/us-srilanka-election-violence-idUSBRE98J06W20130920. 
  22. "Candidate's home attacked ahead of historic Sri Lanka poll". பிபிசி. 20 செப்டம்பர் 2013. http://www.bbc.co.uk/news/world-asia-24171429. 
  23. பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தி_சசிதரன்&oldid=3678905" இலிருந்து மீள்விக்கப்பட்டது