அனந்த சதுர்தசி
ஆனந்த் சதுர்த்தி / கணேச விசர்சனம் (Anant Chaturdashi / Ganesh Visarjan) என்பது சைனர்களாலும் , இந்துக்களாலும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.[1][2]
அனந்த சதுர்த்தி / கணேச விசர்சனம் | |
---|---|
விநாயகரை நீரில் கரைத்தல் | |
கடைபிடிப்போர் | இந்துக்களாலும், சைனர்களாலும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை |
வகை | மதவிழா, இந்தியத் துணைக்கண்டம் |
அனுசரிப்புகள் | கணபதி விசர்சனம், புனித பட்டு நூல் (அனந்தம்), பிரார்த்தனைகள், மத சடங்குகள், பிரசாதம்) |
நாள் | புரட்டாசி சுக்ல பட்சம் சதுர்த்தி |
நிகழ்வு | வருடாந்திரம் |
அனந்த சதுர்த்தி என்பது பத்து நாட்கள் நீடிக்கும் விநாயக உற்சவம் அல்லது விநாயக சதுர்த்தியின் கடைசி நாளாகும். மேலும் விநாயகனின் உருவத்தை பக்தர்கள் நீர்நிலைகளில் கரைப்பது 'கணேச விசர்சனம்' என்று அழைக்கப்படுகிறது.
சைன மத அனுசரிப்பு
தொகுசைன நாட்காட்டியில் இது ஒரு முக்கியமான நாளாகும். சுவேதாம்பர சைனர்கள் பாதோ மாதத்தின் கடைசி 10 நாட்களில் பர்வ பர்யுசானவை அனுசரிக்கிறார்கள். திகம்பர சைனர்கள் தஸ் லக்சன் பர்வினை பத்து நாட்களைக் கடைப்பிடிக்கிறார்கள். சதுர்த்தி (அனந்த சௌதாஸ் என்றும் அழைக்கப்படுகிறது) தஸ் லக்சன் பர்வின் கடைசி நாளாகும். சமவாணி சைனர்கள் தெரிந்தோ அல்லது வேறுவிதமாகவோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் நாள், அனந்த சதுர்த்திக்குப் பிறகு ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது. 12வது தீர்த்தங்கரரான வசுபூஜ்ஜியர் நிர்வாணம் அடைந்த நாள் இது.
இந்து மத அனுசரிப்பு
தொகுநேபாளம், பீகார் , கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், இந்த விழா திருப்பாற்கடலுடனும் விஷ்ணுவின் அனந்த ரூபத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. பதினான்கு திலகங்களுடன் (சிறிய செங்குத்து கீற்றுகள்) ஒரு சிலை மரப் பலகை ஒன்றில் செய்யப்படுகிறது. கீற்றுகளில் பதினான்கு கோதுமை ரொட்டிகள் வைக்கப்படுகின்றன. பாற்கடலைக் குறிக்கும் பஞ்சாமிர்தம் (பால், தயிர், வெல்லம், தேன் மற்றும் நெய் ஆகியவற்றால் ஆனது) இந்த மரப் பலகையில் வைக்கப்படுகிறது. 14 முடிச்சுகள் கொண்ட ஒரு நூல், அனந்தரின் அடையாளமாக ஒரு வெள்ளரிக்காயில் சுற்றப்பட்டு, இந்த "பாற்கடலில்" ஐந்து முறை சுழற்றப்படுகிறது. பின்னர், இந்த அனந்த நூல் முழங்கைக்கு மேல் வலது கையில் ஆண்களால் கட்டப்பட்டது. இதை பெண்கள் தங்கள் இடது கையில் கட்டுவார்கள். இந்த அனந்த் நூல் 14 நாட்களுக்குப் பிறகு அகற்றப்படுகிறது.
புகைப்படங்கள்
தொகு-
மும்பையில் கணேச விசர்சனம்
-
விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன
-
அனந்த சதுர்த்தி அன்று பிள்ளையாரை நீரில் கரைப்பது
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "2013 Hindu Festivals Calendar for Bahula, West Bengal, India". drikpanchang.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.
18 Wednesday Anant Chaturdashi
- ↑ "Anant Chaturthi 2019, Anant Chaturdashi Legends - Festivals of India".