அனிதா ஆர்யா
அனிதா ஆர்யா என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர். இவர் 13 வது மக்களவையில் தில்லியின் கரோல் பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல் தில்லி மாநகரத் தந்தையாகவும் இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஅனிதா ஆர்யா 1963ஆம் ஆண்டு சனவரி 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்தார்.[1] இவரது தந்தை குந்தன் லால் நிமல் மற்றும் தாய் பிரேம்வதி ஆவர்.[2] இவர் ஆக்ராவில் உள்ள ஸ்ரீமதி சிங்குரி பால் பெண்கள் இடைநிலைக் கல்லூரியில் 10-12ஆம் வகுப்பு படித்தார்.[3]
இவர் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை ஆக்ரா கல்லூரியில் பெற்றார்.கல்வியியலில் இளங்கலை படிப்பினை ரோஹ்தக் (அரியானா) மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[3] இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை "சர் ஜதுநாத் சர்க்கார்- வாழ்க்கை வரலாறு மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் பங்களிப்புகள்" என்பதாகும்.[2]
தொழில்
தொகுதில்லி
தொகுபிப்ரவரி 1997 முதல் அக்டோபர் 1999 வரை புதுதில்லியில் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] இவர் ஏப்ரல் முதல் அக்டோபர் 1999 வரை குறுகிய காலத்திற்குத் தில்லி மாநகரத் தந்தையாகவும் பணியாற்றினார். இங்கு இவர் கல்விக் குழுவின் துணைத் தலைவராகவும் மாநகராட்சியில் தொடர்ந்தார்.[2]
இவர் மாநகரத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில், சிறந்த சுகாதாரமான சூழ்நிலைகளை உருவாக்கவும், மாசுபாட்டைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார். அரசு நடத்தும் பள்ளிகளில் சிறந்த கல்வி வசதிகளையும் உருவாக்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சுகாதார திட்டங்களையும் அவர் உருவாக்கினார்.[2]
மக்களவை
தொகு1999-ல் கரோல் பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தில்லியில் கரோல் பாக் மட்டுமே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால், இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்ற மற்றொரு தலித் பெண்ணான மீரா குமாருக்கு எதிராக இவர் போட்டியிட்டார்.
இவரது ஆதரவாளர்கள், இவரது பிரச்சாரத்தின் போது “இதோ வந்தாள் தலித்துகளின் மகள்!” என்று கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.
குழுக்கள்
தொகு1999 முதல் 2000 வரை ரயில்வே குழுவில் பணியாற்றினார். 2000 முதல் 2001 வரை இவர் பெண்கள் அதிகாரமளிக்கும் குழுவில் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[2]
சர்ச்சைகள்
தொகு2001-ம் ஆண்டு மத்திய அமைச்சர் சாந்தகுமார், முன்னாள் குடியரசுத் தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு எதிராகச் சாதிவெறிக் கருத்துகளை வெளியிட்டார். அனிதா ஆர்யா, ராம்நாத் கோவிந்த் மற்றும் அசோக் பிரதான் ஆகியோருடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. ஜனா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து, தலித் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், தலித் வாக்குகளில் ஒரு தொகுதியை இழக்க நேரிடும் என்றும் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.[4]
தற்போதைய பணி
தொகுபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களில் உள்ள எட்டு பெண்களில் அனிதா ஆர்யா ஒருவர் ஆவார்.[5]
இவர் "இந்தியப் பெண்கள்" என்ற தலைப்பில் மூன்று புத்தகங்களின் தொகுப்பையும் எழுதியுள்ளார். இவை "சமூகம் மற்றும் சட்டம்", "கல்வி மற்றும் அதிகாரமளித்தல்" மற்றும் "வேலை மற்றும் மேம்பாடு" ஆகும்.[2]
இவர் புது தில்லி மாநகராட்சி மன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராகவும் உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅனிதா ஆர்யா 1990-ல் பர்வீன் சந்திரா ஆர்யாவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[2]
இவரது பொழுதுபோக்குகளில் அரசியல் அல்லது மதம் தொடர்பான புத்தகங்கள் அல்லது பத்திரிகைகள் படிப்பது அடங்கும். சமைப்பது, திரைப்படம் பார்ப்பது, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்பது போன்றவற்றையும் அனிதா விரும்புகின்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BJP nominee in a tough fight in Delhi's only reserved LS seat". outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
- ↑ 3.0 3.1 ADR. "ANITA ARYA(Bharatiya Janata Party(BJP)):Constituency- Karol Bagh(NATIONAL CAPITAL TERRITORY OF DELHI) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
- ↑ "rediff.com: BJP's dalit leaders demand action against Shanta Kumar". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
- ↑ Administrator. "National Executive Members". bjp.org. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.