அனிதா பரத்வாஜ்
அனிதா பரத்வாஜ் (Anita Bhardwaj) என்பவர் இந்திய மலைபோன்ற உயர் நிலப்பகுதி மீட்பு மருத்துவர் ஆவார். இவர் சிக்ஸ் சிக்மா ஹை ஆல்டிட்யூட் மருத்துவ மீட்பு சேவையின் கூட்டு மருத்துவ இயக்குநராக உள்ளார். மேலும் இவர் இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருதினை பெற்றுள்ளார்.
அனிதா பரத்வாஜ் | |
---|---|
அனிதா பரத்வாஜ் மார்ச் 8, 2018-ல் |
வாழ்க்கை
தொகுஅனிதா இந்தியாவின் சிக்ஸ் சிக்மா சுகாதார மருத்துவ மீட்பு சேவையமைப்பின் மருத்துவ இயக்குநராக உள்ளார். இந்த சேவையானது (மார்ச் 2018 நிலவரப்படி) உயரமான இடங்களில் 50,000 பேருக்கு மேல் உதவியது. சுமார் 24,000 அடி உயரத்தில் வாழும் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது.[1]
2014ஆம் ஆண்டில், யாத்திரிகர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குவதற்காக இவர் மேற்கொண்ட பயணங்கள் உட்பட[2] இவரது பணிக்காக கல்பனா சாவ்லா ஷௌர்யா விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் 50,000 ரூபாய் பரிசாகப் பெற்றார்.[3]
அனிதா மலைப்பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காகப் பெயர் பெற்றவர்.[4] 2013 வட இந்திய வெள்ளம், நேபாள பூகம்பம் மற்றும் அமர்நாத் யாத்திரை தாக்குதல் போன்ற நிகழ்வுகளில் இவர் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[2]
அனிதாவிற்கு நாரி சக்தி விருது குடியரசுத் தலைவர் இல்லத்தில் தர்பார் அரங்கில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தால் அனைத்துலக பெண்கள் நாளன்று வழங்கப்பட்டது. இந்த விருது பெண்களுக்கான இந்தியாவின் உயரிய குடிமகள் விருதாகும்.[2]
சூலை 2019-ல் உத்தராகண்டம் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ருத்ரபிரயாக்கில் மலை கல்வி நிறுவனத்திற்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டார். இந்த நிதியானது 1,200 வேலைகளை உருவாக்கும். இது சிக்ஸ் சிக்மா மலைப்பகுதி மருத்துவ மீட்பு சேவையமைப்பினால் இயக்கப்படும். புதிய மையம் கல்வி மற்றும் பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கும். மருத்துவர் பிரதீப் பரத்வாஜ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவ இயக்குநர், மருத்துவர் அரவிந்த் குமார், மருத்துவர் பர்வேஸ் அகமது, பீம் பகதூர், தேப்ஜித் நாயக் மற்றும் பரத்வாஜ் உள்ளிட்ட சேவைகளில் முன்னணி ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅனிதா மருத்துவர் பிரதீப் பரத்வாஜை மணந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ India #StayHome #StaySafe, P. I. B. (2018-03-07). "Meet Dr. Anita Bhardwaj, #NariShakti Puraskar 2017 awardee. She is a medical practitioner who has dedicated her career to ensuring health services in the most difficult situationspic.twitter.com/OkkEkP466M". @PIB_India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
- ↑ 2.0 2.1 2.2 "Nari Shakti of 30 women to be honoured at Rashtrapati Bhavan". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
- ↑ 3.0 3.1 https://www.pressreader.com/india/hindustan-times-jalandhar/20160309/282449938122171. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15 – via PressReader.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "दूसरी बार झज्जर की 'बहू' को मिलेगा 'नारी शक्ति सम्मान', पहाड़ों में लोगों को दे रहीं 'संजीवनी'". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ANI (2019-07-06). "U'khand CM accepts proposal to establish Six Sigma Institute of Mountain Medicines & High Altitude Rescue". Business Standard India. https://www.business-standard.com/article/news-ani/u-khand-cm-accepts-proposal-to-establish-six-sigma-institute-of-mountain-medicines-high-altitude-rescue-119070600841_1.html.