அனுஜா அகதூட்டு
அனுஜா அகதூட்டு (Anuja Akathoottu) என்பவர் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழிக் கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டில், அம்மா உறங்குன்னில்லா கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்றார்.
அனுஜா அகதூட்டு Anuja Akathoottu | |
---|---|
பிறப்பு | அனுஜா ஏ. ஆர். சூலை 1987 (அகவை 37) பாப்பிரா, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், அறிவியலாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர் -வேளாண் பொறியியல் |
வகை | கவிதை, சிறுகதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Amma Urangunnilla |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி யுவ புராஸ்கர், ஒஎன்வி யுவ சத்திய புரஸ்கார் |
துணைவர் | முகமது அசுலாம் எம். கே. |
பெற்றோர் | பாப்பிரா இராதாகிருஷ்ணன் நளினி பேக்கல் |
வாழ்க்கை வரலாறு
தொகுஅனுஜா அகத்தூட்டு என்று பிரபலமாக அறியப்படும் அனுஜா ஏ. ஆர்,[1] 1987ஆம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாட்டுபுழா அருகே உள்ள பைப்ராவில் பைப்ரா ராதாகிருஷ்ணன் மற்றும் நளினி பேக்கல் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.[2][3] இவர் துயா இருதய பள்ளி, திருச்சூர், சிறு மலர் பள்ளி, மூவாட்டுப்புழா மற்றும் புனித அகத்தியன் மேல்நிலைப் பள்ளி, மூவாட்டுப்புழா ஆகியவற்றில் கல்வி பயின்றார். இவர் கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக வேளாண்மையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். அனுஜா இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லியில் முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டத்தினை முடித்தார். முதுநிலை படிப்பில் தங்கப் பதக்கத்தம் பெற்றார்.[4] 2009-ல், சாகித்திய அகாதமி நடத்திய இளம் எழுத்தாளர்களுக்கான தேசிய முகாமில் பங்கேற்றார்.[4] அனுஜா, கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியலாளராக பணிபுரிகிறார். மேலும் இவரது சிறப்புத் துறையாக விவசாயம்/மீன்பிடி பொருளாதாரம் உள்ளது.[5] இவரது கணவர் மருத்துவர் முகம்மது அசுலம் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.[5]
வெளியீடுகள்
தொகுகௌரவங்களும் விருதுகளும்
தொகு- 2019 சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார்[5]
- ஓ.என்.வி. இளைஞர் இலக்கிய விருது[6]
- அபுதாபி சக்தி விருது[5]
- வெண்மணி விருது[5]
- திரூர் துஞ்சன் நினைவு விருது[5]
- வி.டி.குமரன் ஆசிரியர் விருது[5]
- பினோய் சதுர்த்தி விருது[5]
- வைலோப்பில்லி விருது[5]
- ஐயப்ப பணிக்கர் நினைவு கவிதை விருது[5]
- கமலா சுரய்யா விருது[5]
- அட்லசு-கைரளி கவிதை விருது[5]
- அங்கனம் இலக்கிய விருது[5]
- கேரள பள்ளி இளைஞர் விழா மாநில அளவிலான பரிசு[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Central Marine Fisheries Research Institute". www.cmfri.org.in. Archived from the original on 2023-06-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
- ↑ "Malayath Appunni, Anuja Akathootu selected for Sahitya Akademi award". The New Indian Express. https://www.newindianexpress.com/states/kerala/2019/jun/15/malayath-appunni-anuja-akathootu-selected-for-sahitya-akademi-award-1990312.html.
- ↑ "'അമ്മ ഉറങ്ങുന്നില്ല' അനുജ അകത്തൂട്ട് എഴുതിയ കവിത" (in ml). Asianet News Network Pvt Ltd. https://www.asianetnews.com/literature-magazine/anuja-akathuttu-poem-amma-urangunnilla-pvk44h.
- ↑ 4.0 4.1 4.2 "അനുജ അകത്തൂട്ട്". Keralaliterature.com (in மலையாளம்). 14 October 2017.
- ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 "അനുജ അകത്തൂട്ടിന് കേന്ദ്ര സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരം; ബാലസാഹിത്യത്തില് മലയത്ത് അപ്പുണ്ണി" (in ml). Chandrika Daily. https://www.chandrikadaily.com/anuja-akathoot-and-malayath-appunni-get-central-award.html.
- ↑ "ഒഎൻവി സാഹിത്യപുരസ്കാരം എം ടിക്ക്" (in ml). Deshabhimani. https://www.deshabhimani.com/news/kerala/onv-mt-vasudevan-nair/722696.