அனுபிரியா கோயங்கா

இந்திய நடிகை

அனுப்பிரியா கோயங்கா (Anupriya Goenka; பிறப்பு 29 மே 1987) பாலிவுட், தெலுங்குப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையும், விளம்பர மாதிரிக் கலைஞரும் ஆவார்.[1] ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பாரத் நிர்மாண் மிந்த்ராவின் முகமாக இவர் 2013இல் முதன்முதலில் புகழ் பெற்றார்.[2] [3] அனுப்பிரியா, 2013ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான பொட்டுகாடு மூலம் திரையில் அறிமுகமானார்.[4] இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு வொர்த் தி கிஸ் என்ற குறும்படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து இவர் நகைச்சுவை-நாடகமான பாபி சசூசு (2014), பாற்சாலா (2014), அதிரடி நகைச்சுவை திசூம் (2016), குற்ற-நாடகத் திரைப்படமான டாடி (2017) போன்றத் திரைப்படங்களில் நடித்தார். மேலும், அதிரடியாக பரபரபூட்டும் டைகர் சிந்தா கை (2017), வார் (2019), வரலாற்று நாடகத் திரைப்படமான பத்மாவத் (2018) ஆகியவற்றிலும் நடித்தார். இவை அனைத்தும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் ஒன்றாக உள்ளது.

அனுபிரியா கோயங்கா
2019இல் அனுபிரியா
பிறப்பு29 மே 1987 (1987-05-29) (அகவை 36)
கான்பூர், உத்தரப் பிரதேசம், India
கல்விசாகித் பகத்சிங் கல்லூரி
பணி
  • நடிகை
  • விளம்பர மாதிரி
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது வரை
உயரம்165செ.மீ

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அனுப்ரியா கோயங்கா 29 மே 1987[5] உத்தரபிரதேசத்தின் கான்பூரில் ஆடை தொழில்முனைவோர் ரவீந்திர குமார் கோயங்கா மற்றும் இல்லத்தரசியான புஷ்பா கோயங்கா ஆகியோருக்கு பிறந்தார். நான்கு குழந்தைகளில் இளையவரான அனுப்பிரியாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். புதுதில்லியின் சகேதத்தில் உள்ள ஞான பாரதி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் , தில்லி பல்கலைக்கழகத்தின் சாகீத் பகத்சிங் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே இவர் தனது குடும்பத்திற்கான பொருளீட்டினார். "நான் தொழில்முனைவோராக இருந்தேன். என் தந்தைக்கு ஆடை ஏற்றுமதி தொழிலில் உதவ ஆரம்பித்தேன். திரைப்படம் மற்றும் எனது நிறுவன வாழ்க்கை இரண்டிற்கும் என்னால் நியாயம் செய்ய முடியாது என்பதை உணரும் வரை நடிப்பு எப்போதும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது." என்று இவர் கூறினார்.

தொழில் தொகு

அனுப்பிரியா கோயங்கா, 2009இல் மும்பைக்குச் சென்றார்.[6] முதலில், இவர் நிறுவனத் துறையில் பணிபுரிந்து மும்பையில் குடியேறினார். அங்கு இவர் தனது குடும்பத்துடன் இணைந்தார். கோயங்கா நடிப்பிலும் ஆர்வமாக இருந்தார். மேலும், நடிப்புத் தொழிலுக்கும் நிறுவனத் துறைக்கும் இடையில் தடுமாறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பாரத் நிர்மாண் விளம்பர பிரச்சாரத்தின் முகமாகவும், 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மாயிழை (லெஸ்பியன்) விளம்பரமான மிந்த்ராவில் மாயிழை கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார். இவர் 2013இல் விளம்பரங்களைச் செய்யத் தொடங்கினார். கொக்கக் கோலா, கார்னியர், ஸ்டேப்ரீ, கோடக் மகிந்தரா வங்கி, பெப்பர்பிரை, வோடபோன் உள்ளிட்ட நிறுவனக்களுக்கான பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். [7] இவர் ஒரு வருடத்திற்கும் மேலாக ShopCJ எனப்படும் இணையத்தில் வீட்டிலிருந்தபடியே வணிகம் செய்யும் நிறுவனத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டின் அதிரடி திரைப்படமானர் டைகர் ஜிந்தா ஹையில் செவிலியர் பூர்ணாவின் பாத்திரத்தை இவர் சித்தரித்தார், அதற்காக இவர் மிகவும் பாராட்டப்பட்டார்.[8] ஷாஹித் கபூருக்கு இணையாக 2018இல் வெளியான வரலாற்றுக் காவியமான "பத்மாவத்" படத்தில் ராணி நாகமதியின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. Sharma, Smrity (27 October 2017). "Did You Know: This Actress In Padmavati Song Ghoomar Has Played A Lesbain In A Viral Ad". india.com. Archived from the original on 1 January 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  2. Singh, Suhani (20 September 2013). "Anupriya Goenka now better known as Priya, thanks to being the face of UPAs Bharat Nirman ad campaign". India Today. http://indiatoday.intoday.in/story/anupriya-goenka-upa-bharat-nirman-ad-campaign/1/310805.html. பார்த்த நாள்: 8 January 2018. 
  3. Sharma, Smrity (27 October 2017). "Padmavati Trivia: Anupriya Goenka In Shahid Kapoor, Deepika Padukone’s Ghoomar Played A Lesbain In A Viral Ad". India.com. http://www.india.com/showbiz/padmavati-trivia-anupriya-goenka-in-shahid-kapoor-deepika-padukones-ghoomar-played-a-lesbain-in-a-viral-ad-2571248/. பார்த்த நாள்: 8 January 2018. 
  4. Mishra, Shivani (30 October 2017). "Padmavati: All you need to know about Anupriya Goenka, the other queen in Ghoomar". InUth. Archived from the original on 8 January 2018. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
  5. "Birthday special: एक्टिंग की क्वीन हैं शाहिद कपूर की ऑनस्क्रीन पत्नी रह चुकीं ये एक्ट्रेस, जानिए करियर की ये अहम बातें". TV9 Hindi (in hindi). 2021-05-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Ved, Sonal (12 June 2015). "Meet the Myntra girls everyone's talking about". VOGUE India. Archived from the original on 8 January 2018. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
  7. "Forget Kat, meet another tigress Anupriya Goenka from TZH". Deccan Chronicle. 27 December 2017. Archived from the original on 1 January 2018. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  8. "Tiger Zinda Hai actor Anupriya Goenka: Salman Khan has a divine personality". The Indian Express. 29 December 2017. Archived from the original on 29 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  9. "Padmavati: Meet Anupriya Goenka, first wife of Maharawal Ratan Singh". Freepress Journal. 28 October 2017. Archived from the original on 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபிரியா_கோயங்கா&oldid=3590713" இலிருந்து மீள்விக்கப்பட்டது