அனுமந்த வாகனம் என்பது விழாக்காலங்களில் திருமால் உலாபோகும் வாகனங்களில் ஒன்றாகும். வைணவ சமயத்தில் அனுமரை சிறிய திருவடி என்கின்றனர்.[1] அனுமன் இராமாயணத்தில்ராமனின் சிறந்த பக்தனாகக் கொண்டாடப்படுகிறார்.
பெரும்பாலான வைணவ தலங்களில் அனுமந்த வானகனத்தில் ஒரு முகத்தோடு உள்ளார். வெகுசில தலங்களில் ஐந்து முக அனுமன் வாகனம் உள்ளது. இதனை பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனம் எனவும் கூறுவர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்திலுள்ள அரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவத்தின் ஐந்தாம் நாளில் உற்சவர் நம்பெருமான் அனுமந்த வாகனத்தில் உலாவருகிறார்.
விருதுநகர் ராமர் கோவிலில் ராம நவமி பிரம்மோற்சவ திருவிழாவில் ராமர், அனுமந்த வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.