அனுமார் கோயில், அயோத்தி
அனுமார் கர்ஹி அல்லது அனுமார் இல்லம் (Hanuman Garhi) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அயோத்தி நகரத்தில் உள்ள 10-ஆம் நூற்றான்டுக் கோயில் ஆகும்.[1] அயோத்தி நகரத்தின் நடுவில் அமைந்த இந்த அனுமார் கோயில் 76 படிக்கட்டுகள் கொண்டது. இக்கோயிலில் அனுமார் குழந்தை வடிவில், தன் அன்னை அஞ்சனையின் மடியில் அமர்ந்து காட்சி தருகிறார்.[2]
அனுமார் கோயில், அயோத்தி | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
கோயில் தகவல்கள் |
ராம ஜென்ம பூமியில் உள்ள இராமர் கோயிலுக்குச் செல்பவர்கள், முதலில் இந்த கோயிலில் குடிகொண்டுள்ள அனுமாரை வழிபட்ட பிறகே இராமரை வழிபடச் செல்லவேன்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை ஆகும்.[3][4][5] 5 ஆகஸ்டு 2020 அன்று ராம ஜென்ம பூமியில் உள்ள இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு சென்ற போது, முதலில் இந்த அனுமார் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.[6][7]
தொன்ம வரலாறு
தொகுஇராவணனை வென்று இராமர், சீதையுடன் திரும்பிய பின்னர் அனுமான் அயோத்திலேயே வாழ்ந்து வந்தார். அனுமார் வாழ்ந்த இந்த இடத்தில் கிபி 10-ஆம் நூற்றாண்டில் கோயில் எழுப்பப்பட்டது. எனவே இக்கோயிலுக்கு அனுமார் இல்லம் பொருள் படியாக, இந்தியில் அனுமன் கர்கி அழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுஇக்கோயில் வாயு மைந்தன் அனுமார், தன் அன்னை அஞ்சனையின் மடியில் அமர்ந்தவாறு காட்சி அளிக்கிறார். இந்த அனுமார் கோயில் ராம ஜென்ம பூமி அருகில் உள்ளது. 1855-இல் இக்கோயிலை இசுலாமியர்கள் இடிக்க முயற்சி செய்த போது அயோத்தி நவாப் தலையிட்டு காத்தார்.[8][9]
விழாக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lutgendorf, Philip (2007-01-11). Hanuman's Tale: The Messages of a Divine Monkey (in ஆங்கிலம்). Oxford University Press. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-804220-4.
- ↑ "Hanuman Garhi | Ayodhya | UP Tourism". www.ayodhya.gov.in. Archived from the original on 2020-07-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.
- ↑ "Hanuman Garhi". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
- ↑ "Hanuman Garhi". www.uptourism.gov.in. Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
- ↑ "Incredible India | The Hanuman Garhi". www.incredibleindia.org. Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
- ↑ 500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
- ↑ Ayodhya Ram Mandir Updates : ராமர் கோவில் பூமி பூஜை முக்கிய நிகழ்வுகள்
- ↑ Dutta, Prabhash K (7 December 2017). "Ayodhya: When Wajid Ali Shah saved Hanuman temple from Muslims near Babri Masjid". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Pillai, Manu S. (2017-12-06). "When a temple was besieged in Ayodhya". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.