அனுராதா கபூர்

இந்திய நாடக இயக்குனர்

அனுராதா கபூர் (Anuradha Kapur) ஓர் இந்திய நாடக இயக்குனரும், நாடக பேராசிரியரும் ஆவார். இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசிய நாடகப் பள்ளியில் நாடகங்களை கற்பித்தார். மேலும், ஆறு ஆண்டுகள் (2007-2013) தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக இருந்தார். 2004 இல் நாடக இயக்குனராக பணியாற்றியதற்காக, சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] 2016 ஆம் ஆண்டில், நாடகத்துறையில் சிறந்து விளங்கியதற்காக ஜெ. வசந்தன் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஒரு இயக்குனராக இவரது பணி அதன் திறந்த மற்றும் ஊடாடும் தன்மைக்காக குறிப்பிடப்படுகிறது.

அனுராதா கபூர்
பிறப்பு1951
நைனித்தால், இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மிராண்டா ஹவுள் கல்லூரி, தில்லி
இலீட்ஸ் பல்கலைக்ககழகம்
பணிநாடக இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1973 - தற்போது வரை
அறியப்படுவதுதேசிய நாடகப் பள்ளியின் இயக்குநர்
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது (2004);
ஜே. வசந்தன் வாழ்நாள் சாதனையாளர் விருது (2016)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அனுராதா கபூர் 1951 இல் நைனித்தாலில் பிறந்தார். இவர் புதுதில்லியின் நவீனப் பள்ளியின் முதல்வராக இருந்த எம். என். கபூரின் மகள் ஆவார். கலை வரலாற்றாசிரியரும் விமர்சகருமான அமிர்தா கபூரின் சகோதரியும் ஆவார்.[2] புதுதில்லியின் நவீனப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தில்லியின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். 1973 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

அனுராதா கபூர் தில்லி பல்கலைக்கழகத்தின் பாரதி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக தனது கற்பித்தல் வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், தான் நாடகத்தை ஒரு தொழிலாக தொடர விரும்புகிறார் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார்.[3] மாணவ நாட்களில், இவர் ஓம் சிவபுரி தலைமையிலான திசாந்தர் என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் மோகன் ராகேஷின் அடே-அதுரே உட்பட பல நாடகங்களில் நடித்தார். இங்கிலாந்தின் இலீட்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் நாடகக் கலைகளில் முதுகலைப் பட்டம் பெற கல்லூரியில் இருந்து விடுப்பு பெற்றார். இறுதியில் இவர் தனது முனைவர் ஆராய்ச்சியை முடித்தார்.

1981 ஆம் ஆண்டில், இவர் தேசிய நாடகப் பள்ளியின் இணைப் பேராசிரியராக சேர்ந்து, பின்னர் பேராசிரியராக ஆனார், மேலும் இவர் ஓய்வு பெறும் வரை தேசிய நாடகப் பள்ளியுடன் இருந்தார். இந்த காலகட்டத்தில், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் முத்திரை பதித்த பல மாணவர்களுக்கு இவர் கற்பித்தார். அவர்களில் சிலர் சீமா பிஸ்வாஸ், இர்பான் கான், ராஜ்பால் யாதவ், நவாசுதீன் சித்திகி மற்றும் அதில் உசைன் [4] ஆகியோர் அடங்குவர்

சூலை 2007 இல், இவர் ஐந்து வருட காலத்திற்கு தேசிய நாடகப் பள்ளியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். பின்னர் சூலை 2013 வரை ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டது. இவர் தேசிய நாடகப் பள்ளியின் ரெபர்டரி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார்.[5] தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கலாச்சார மற்றும் படைப்பாக்க வெளிப்பாடுகள் பள்ளியில் வருகை பேராசிரியராக உள்ளார்.[6]

இவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நிறுவனங்களில் கற்பித்துள்ளார். 2016-2017 ஆம் ஆண்டில் , பெர்லினின் பிரீ யுனிவர்சிட்டட்டில் சக ஊழியராக இருந்தார்.[7]

ஒரு இயக்குனராக இவரது பணியின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் திறந்த மற்றும் ஊடாடும் தன்மையாகும். இவர் காட்சி மற்றும் நிகழ்படக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அர்பிதா சிங், புபன் காகர், மதுஸ்ரீ தத்தா, நளினி மலானி, நீலிமா ஷேக் மற்றும் விவன் சுந்தரம் ஆகியோர் இவருடன் பணியாற்றியவர்கள். ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நாடக பயிற்சியாளர்களின் ஒரு குழுவான விவாதியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "SNA: List of Awardees". sangeetnatak.gov.in. Archived from the original on 19 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Kapur, Geeta (2000). When was Modernism: Essays on Contemporary Cultural Practice in India. Tulika. p. xv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85229-14-7. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  3. Phukan, Vikram (1 December 2018). "Anuradha Kapur – Directing change". ForbesLife India. http://www.forbesindia.com/article/forbeslifes-india/anuradha-kapur-directing-change/51967/1. பார்த்த நாள்: 16 February 2019. 
  4. Saravanan, T. (8 January 2015). "Cutting across the divide". https://www.thehindu.com/features/friday-review/theatre/theatre-exponent-anuradha-kapur/article6767991.ece. பார்த்த நாள்: 22 May 2019. 
  5. "The Repertory Company of the National School of Drama". nsd.gov.in. National School of Drama. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
  6. "AUD – School of Culture and Creative Expressions". aud.ac.in. Archived from the original on 19 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Anuradha Kapur – International Center "Interweaving Performance Cultures"". Freie Universitat, Berlin. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  8. "Anuradha Kapur". https://www.thehindu.com/books/anuradha-kapur/article5393839.ece. பார்த்த நாள்: 4 April 2019. 
  9. "Striving for excellence". https://www.indiatoday.in/magazine/supplement/story/20170213-sangeet-natak-akademi-anuradha-kapur-theatre-director-985685-2017-02-03. பார்த்த நாள்: 1 February 2020. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_கபூர்&oldid=3927085" இலிருந்து மீள்விக்கப்பட்டது