அம்பேத்கர் பல்கலைக்கழகம் தில்லி


அம்பேத்கர் பல்கலைக்கழகம் தில்லி (Ambedkar University Delhi (அஃகுப்பெயர்:AUD); முந்தையப் பெயர்:Bharat Ratna Dr. B. R. Ambedkar University) என்பது, இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ளது. இப்பல்கலைக்கழகம், சிறப்புரிமைப் பெற்றுள்ள, இந்திய ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான தில்லிஅரசின் முழுநிதி உதவியால் உருவாக்கப்பட்டது.[1] The University is now declared eligible to receive Central Government Assistance.[2] 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் செயற்படத் தொடங்கிய இந்தப் பல்கலைக்கழகம் துணைநிலையில்லாப் பல்கலைக்கழகம் ஆகும். இதன் முதன்மை நோக்கம் இளநிலை, முதுநிலைப் பட்டங்களையும், அது சார்ந்த கல்வியையும் வளர்த்தல் ஆகும். இப்பல்கலைக்கழகம் நடுவண் அரசின் உதவிகளைப் பெற தகுதிப் பெற்றிருப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்டது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால், இப்பல்கலைக்கழகம், 'ஏ' ("A") தகுதித்தரம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.[4]

அம்பேத்கார் பல்கலைக்கழகம் தில்லி
முந்தைய பெயர்
பாரத் ரத்னா டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக் கழகம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2007
வேந்தர்அனில் பைச்சால்
துணை வேந்தர்சியாம் பி. மேனன்
கல்வி பணியாளர்
199 (31 மார்ச்சு 2014)
மாணவர்கள்1438 (31 மார்ச்சு 2014)
பட்ட மாணவர்கள்546 (31 மார்ச்சு 2014)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்795 (31 மார்ச்சு 2014)
97 (31 மார்ச்சு 2014)
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
பழைய தில்லி (கெசுமீரி நுழைவு வளாகம்) - 16 ஏக்கர்கள்
மேற்கு தில்லி (கராம்புரா வளாகம்)
தெற்கு தில்லி (லோடுகிச்சாலை வளாகம்) - 2 ஏக்கர்கள்

வட தில்லி (தீர்பூர் வளாகம் கட்டப்படுகிறது) - 110 ஏக்கர்கள்
வடமேற்கு தில்லி (ரோகினி வளாகம்)
சுருக்கப் பெயர்AUD
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), இந்தியப் பல்கலைக் கழகக் குழுமம்
இணையதளம்aud.ac.in

மேற்கோள்கள் தொகு

  1. "About AUD". Archived from the original on June 6, 2018. பார்க்கப்பட்ட நாள் July 6, 2018. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Ambedkar University, Delhi" (PDF). Archived from the original (PDF) on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
  3. "Ambedkar University, Delhi" (PDF). Archived from the original (PDF) on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
  4. "NAAC acrreditation Certificate" (PDF). Archived from the original (PDF) on 2015-03-15. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2018.