அனுராதா காந்தி

அனுராதா காந்தி (Anuradha Ghandy) (28 மார்ச் 1954 – 12 ஏப்ரல் 2008) ஓர் இந்திய பொதுவுடைமைவாதியும், எழுத்தாளரும், புரட்சிகர தலைவரும் ஆவார். இவர் தடைசெய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயியம்) உறுப்பினராக இருந்தார். [1] இவர் பெரும்பாலும் பிரச்சாரத்திலும், நகர்ப்புறங்களில் கட்சியின் கிளர்ச்சியிலும் ஈடுபட்டார். [2] மகாராட்டிராவில் உள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சியம்-லெனினியம்) நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

அனுராதா காந்தி
பிறப்புஅனுராதா ஷான்பாக்
(1954-03-28)28 மார்ச்சு 1954
இறப்பு12 ஏப்ரல் 2008(2008-04-12) (அகவை 54)
மும்பை, இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்நர்மதா, வர்ஷா, இரமா, அனு, ஜானகி
படித்த கல்வி நிறுவனங்கள்எல்பின்ஸ்டன் கல்லூரி, மும்பை
அறியப்படுவதுஇந்தியாவில் மாவோயிச இயக்கத்தின் முக்கியத் தலைவர்
வாழ்க்கைத்
துணை

மார்க்சிய இயக்கம் தயாரித்த கொள்கை ஆவணங்களில் சாதிகள், பெண்ணியம், மார்க்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். தண்டகாரண்யத்தில் விவசாய உற்பத்தி போன்ற பகுதிகளில் தொழிலாளர் கூட்டுறவுத் திறனை கெரில்லாக்கள் உணரவைத்தார்கள். அப்போது கட்சியில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்கக் கருத்துக்களை மாற்றுவதிலும் இவர் விமர்சித்தார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அனுராதா நவம்பர் 1983இல், தன்னைப் போன்ற ஒரு நக்சலைட்டான கோபத் காந்தியை மணந்தார். [4] [5] காந்திடி குசராத்தி - பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். [6]

இறப்பு தொகு

ஏப்ரல் 21, 2010 அன்று மலேரியா தொடர்பான காரணங்களால் அனுராதா இறந்தார். [7] இவரது இறுதி நாட்களில், இவர் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்காக பெண்கள் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Banned Organizations". Ministry of Home Affairs. Ministry of Home Affairs (India). Archived from the original on 29 March 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  2. Manoj Prasad, Zahid Rafiq (23 September 2009). "Maoist who went to school in Doon, London". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
  3. Rahul Pandita (26 September 2009). "The Rebel". OPEN. http://www.openthemagazine.com/article/nation/the-rebel. 
  4. [1]
  5. Kobad Ghandy (8 May 2010). "Letter to the Editor". OPEN.
  6. Nauzer Bharucha (24 September 2009). "Kobad's father backed cause: Brother-in-law". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. Rahul Pandita (26 September 2009). "The Rebel". OPEN. http://www.openthemagazine.com/article/nation/the-rebel. Rahul Pandita (26 September 2009). "The Rebel". OPEN.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_காந்தி&oldid=3708105" இலிருந்து மீள்விக்கப்பட்டது