அஞ்சாவ் மாவட்டம்
(அன்ஜாவ் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஞ்சாவ் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 16 பிப்ரவரி 2004 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.
அமைப்புதொகு
இந்த மாநிலத்தின் தலைமை இடமாக ஹவாய் நகரம் உள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1296 மீட்டர் உயரத்தில் லோஹித் ஆற்றின் கரையில் உள்ளது. இதுவே இந்தியாவின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதி ஆகும். எனவே இதன் வடக்கு பகுதி சீனாவுடன் எல்லைப்பகுதியாக உள்ளது.
மக்கள்தொகு
இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டமாகும். இந்த மாவட்டம் ஒரு சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது.
- ஹாயுலியாங்
- ஹவாய்
- மான்சல்
- கோய்லியாங்
- வாலோங்
- கிபிதூ
- சக்லோகம்
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Anjaw District பரணிடப்பட்டது 2006-11-14 at the வந்தவழி இயந்திரம்