அன்னபூர்ணா மகாராணா

அன்னபூர்ணா மகாராணா (Annapurna Maharana) (பிறப்பு: 1917 நவம்பர் 3 - இறப்பு: 2012 திசம்பர் 31) இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் ஆர்வலராக இருந்தார். மேலும், இவர் ஒரு முக்கிய சமூக மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலராகவும் இருந்தார். [1] மகாராணா மோகன்தாசு காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார். [2] சுதந்திர போராளியான பின்னர் ஒடிசாவின் வரலாற்றில் சமூக விழிப்புணர்வு மற்றும் சீர்திருத்தத்தின் ஜோதியாக விளங்கினார். அச்சுனி அப்பா பிரபலமாக அறியப்பட்ட அன்னபூர்ணா நம் தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே, பனாரா சேனாவின் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியைக் கொண்டிருந்தார். [3]

அன்னபூர்ணா மகாராணா
Annapurna Maharana
பிறப்பு(1917-11-03)3 நவம்பர் 1917
ஒடிசா, இந்தியா
இறப்பு31 திசம்பர் 2012(2012-12-31) (அகவை 95)
கட்டக், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுசுதந்திர போராளி, சமூக ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
சரத் சந்திர மகாராணி
பிள்ளைகள்கர்மதேவ் மகாராணா, ஞானதேவ் மகாராணா

[[ஜெயபிரகாஷ் நாராயண்], ஆச்சார்யா வினோபா பாவே, உத்கல்மணி கோபபந்து தாஸ், உத்கல் கௌரவ் மதுசூதன் தாஸ் மற்றும் ஆச்சார்யா ஹரிஹார் போன்ற பெரிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

வாழ்க்கை தொகு

மகாராணா ஒடிசாவில் 1917 நவம்பர் 3, அன்று ரமா தேவி மற்றும் கோபபந்து சௌத்ரி ஆகியோரின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். [1] [4]

இந்திய சுதந்திரப் போராட்டம் தொகு

இவரது பெற்றோர் இருவரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக இருந்தனர். இவரது சகோதரர் மன்மோகன் சௌத்ரி, மாமா நபக்ருஷ்ணா சௌத்ரி மற்றும் இவரது அத்தை மாலதி தேவி ஆகியோர் இந்திய சுதந்திரத்திற்காக தங்களை தியாகம் செய்தனர். [5] தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மக்களுக்கு சேவை செய்வதற்கான தைரியத்தை இவர் பெற்றார். மகாராணாவிற்கு பதினான்கு வயது இருந்தபோது சுதந்திரத்திற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். மோகன்தாசு காந்தியின் ஆதரவாளரானார். 1934ஆம் ஆண்டில், காந்தியுடன் "ஹரிஜன் பாத யாத்திரை" பயணத்தில் ஒடிசா வழியாக பூரி முதல் பத்ராக் வரை சென்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் ஒத்துழையாமை பிரச்சாரத்தின் போது 1942 ஆகத்து உட்பட பிரித்தானிய அரசால் ஆகியோரால் மகாராணா பல முறை கைது செய்யப்பட்டார்.

சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்பாக மகாராணா வாதிட்டார். [1] ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் அப்பகுதியின் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் திறந்தார். வினோபா பாவே தொடங்கிய நிலக்கொடை இயக்கத்துடன் மகாராணாவும் ஈடுபட்டார். சம்பல் பள்ளத்தாக்கின் செயலில் உள்ள கொள்ளைக்காரர்களை ஒருங்கிணைக்க இவர் மேலும் பிரச்சாரம் செய்தார். [2]

நெருக்கடி நிலை காலத்தின் போது கிராம் சேவக் பதிப்பகம் வெளியிட்ட செய்தித்தாளுடன் ரமாதேவி சௌத்ரிக்கு உதவியதன் மூலம் இவர் எதிர்ப்புக்கு ஆளானார். செய்தித்தாள் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது, ரமாதேவி சௌத்ரி மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த நபக்ருட்டிணா சௌத்ரி, ஹரேகிருட்டிணா மகாதாப், மன்மோகன் சௌத்ரி, ஜெய்கிருட்டிணா மொஹந்தி மற்றும் பல தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். [6]

கௌரவம் தொகு

2012 ஆகத்து 19, அன்று தனது கட்டாக் வீட்டில் நடைபெற்ற விழாவில் ஒடிசாவின் மத்திய பல்கலைக்கழகம் மகாராணாவுக்கு மதிப்புறு முனைவர் கௌரவத்தை வழங்கியது. [7]

இறப்பு தொகு

முதுமை தொடர்பான நீண்ட காலநோய்களால் பாதிக்கப்பட்ட மகாராணா ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பகராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனது 96 வயதில் 2012 திசம்பர் 31 அன்று இறந்தார். [1] இவருக்கு கர்மதேவ் மகாராணா, ஞானதேவ் மகாராணா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவரது மறைந்த கணவர் சரத் மகாராணா 2009இல் இறந்தார். 2013 சனவரி 2 அன்று கட்டாக்கில் உள்ள கன்னகர் தகனத்தில் இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. [2]

ஒடிசா ஆளுநர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரே மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் இவரது மரணம் இந்தியாவிற்கும் ஒடிசாவிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வர்ணித்தனர். [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Noted freedom fighter Annapurna Maharana dies". பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பிசினஸ் ஸ்டாண்டர்ட்). 2013-01-01. http://www.business-standard.com/generalnews/news/noted-freedom-fighter-annapurna-maharana-dies/103191/. பார்த்த நாள்: 2013-01-07. 
  2. 2.0 2.1 2.2 "Annapurna Maharana cremated". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-01-03 இம் மூலத்தில் இருந்து 2013-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130615224639/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-03/bhubaneswar/36130072_1_state-honours-freedom-struggle-veteran-freedom-fighter. பார்த்த நாள்: 2013-01-07. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-22.
  4. "Odisha: Freedom fighter Annapurna Maharana passed away". Orissa Diary. 2012-12-31 இம் மூலத்தில் இருந்து 2013-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130313062625/http://orissadiary.com/CurrentNews.asp?id=38594. பார்த்த நாள்: 2013-01-07. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-03-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-22.
  6. Orissa: the dazzle from within (art, craft and culture of ...by G. K. Ghosh - 1993 - - Page 37
  7. "Central University Odisha confers Honoris Causa to Annapurna Moharana". Odisha Diary. 2012-08-19 இம் மூலத்தில் இருந்து 2013-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130311212917/http://orissadiary.com/CurrentNews.asp?id=35957. பார்த்த நாள்: 2013-01-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூர்ணா_மகாராணா&oldid=3708098" இலிருந்து மீள்விக்கப்பட்டது