அன்னி சைதி (எழுத்தாளர்)

இந்திய எழுத்தாளர்

அன்னி சைதி (Annie Zaidi பிறப்பு 1978) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி எழுத்தாளர் ஆவார். இவரது பிரிலியூட் டு ஏ ரியோட் (Prelude To A Riot) என்ற புதினம் டாடா லிட்ரோயேட்சர் லைவ் விருதைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டின் சிறந்த புத்தகத்திற்கான விருதுகள் [1] 2019 ஆம் ஆண்டில், இவர் தனது பிரட், சிமெண்ட், கேக்டஸ் என்ற படைப்புக்காக தி நைன் டாட்ஸ் பரிசைப் பெற்றார். மேலும் 2018 ஆம் ஆண்டில் இவர் தனது அன்டைட்டில் -1 என்ற நாடகத்திற்காக தி இந்து நாடக ஆசிரியர் விருதைப் பெற்றார். இவரது முதல் அபுனைவு நூலாக நோன் டர்ஃப்: பேண்டரிங் வித் பேண்டிட்ஸ் அண்ட் அதர் ட்ரூ டேல்ஸ் என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியானது. இது 2010 இல் வோடபோன் கிராஸ்வேர்ட் புக் விருதுக்கு பட்டியலிடப்பட்டது. [2]

மேலும் இவர் கவிதைகள் ( க்ரஷ், 2007), சிறுகதைகள் ( தி குட் இந்தியன் கேர்ள், 2011 அண்ட் லவ் ஸ்டோரி # 1 டு 14, 2012), நாடகங்கள் ( ஜாம், ஜால் போன்றவை), புதினங்கள் ( குலாப், 2014 ) போன்றவற்றை எழுதியுள்ளார்.

துவக்க வாழ்க்கையும், கல்வியும்

தொகு

சைதி அலகாபாத்தில் பிறந்து இராசத்தானில் வளர்ந்தவர். [3] [4] இவரையும் இவரின் அண்ணனையும் பள்ளி ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய இவர்களின் தாயார் யாஸ்மின் சைதி வளர்த்தார். இவரது தாயார் கவிதை எழுதியுள்ளார். மேலும் இவரது தாத்தா உருது இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்புக்காக தேசிய விருது அளிக்கபட்டு அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். [4] இவரது தாய்வழி தாத்தா பத்மசிறீ விருது பெற்ற உருது எழுத்தாளரும் அறிஞருமான சையத் அலி சவாத் சைதி ஆவார். சிறுமியாக இருந்தபோது, தனக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதில் இருந்து குணமாகி மீண்டு வந்த நேரத்தை 200 புத்தகங்களைப் படித்ததாக சைதி கூறியுள்ளார். [4]

சைதி அஜ்மீரில் உள்ள சோபியா மகளிர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். [4] இவர் அங்கு பயின்ற காலத்தில், கல்லூரி கலாச்சார விழாக்களுக்காக நாடகங்கள், கவிதைகள் போன்றவற்றை எழுதினார். பட்டம் பெற்ற பிறகு, மும்பைவ உள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்சில் ஊடகவியல் படிப்பில் சேர்ந்தார்.

பத்திரிகை வாழ்க்கை

தொகு

கல்லூரி படிப்பிற்குப் பிறகு, சைதி பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [4] இவர் முதலில் ஒரு இணையதளத்தில் பணிபுரிந்தார், பின்னர் மிட் டே பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றினார். [4] இந்த சமயத்தில், இவர் பல மாதங்கள் கவிதை எழுதுவதை விட்டுவிட்டிருந்தார். [4] 2005 இல் பிரண்ட்லைனில் வேலைக்குச் சென்றார். பிரண்ட்லைனில் பணிபுரியும் போது, இவர் நோ டர்ஃப் என்ற பெயரில் தனது வலைப்பதிவைத் தொடங்கினார். இதில் எழுதியவைகளே பின்னர் இவர் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. [4]

2008 சனவரியில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு துணைப் பத்திரிக்கையான ரூஜ், கவனிக்க வேண்டிய பெண்களின் (30 வயதுக்குட்பட்டவர்கள்) பட்டியலில் சைடியின் பெயரைக் குறிப்பிட்டது. 2013 ஆம் ஆண்டில், யோ யோ ஹனி சிங்கின் பாடல் வரிகள் மற்றும் காணொளிகளின் தவறான உள்ளடக்கத்தை விமர்சித்து "ஹனி சிங்கிற்கு ஒரு பகிரங்க கடிதம்" எழுதினார். [5] [6]

கேரவன், ஓபன், தி இந்து, எல்லே, ஃபோர்ப்ஸ் இந்தியா, பெமினா, மேரி கிளாரி, தெகல்கா, டெக்கன் ஹெரால்டு உள்ளிட்ட பல வெளியீடுகளில் இவர் எழுதியுள்ளார். அவர் 2011 மற்றும் 2013 க்கு இடையில் டி.என்.ஏவுக்கு ( டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் ) வாராந்திர பத்தியை எழுதினார். சைதி தி இந்து நாளிதழில் கட்டுரை எழுதுகிறார். மேலும் சோனிபட்டில் உள்ள ஓ.பி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் இதழியலைக் கற்பிக்கிறார். [7]

விருதுகள்

தொகு
  • 2010, குறுகிய பட்டியலில், வோடபோன் கிராஸ்வேர்ட் புக் அவார்ட் [8]
  • 2018, வெற்றியாளர், தி இந்து நாடக ஆசிரியர் விருது
  • 2019, வெற்றியாளர், நைன் டாட்ஸ் பரிசு
  • 2020, வெற்றியாளர், டாடா லிட்டரேச்சர் லைவ் புக் ஆஃப் தி இயர் [9]
  • 2020, குறுகிய பட்டியலில், இலக்கியத்திற்கான ஜே.சி.பி பரிசு

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் தற்போது மும்பையில் வசித்துவருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tata Literature Live: The fest announces its annual awards". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
  2. "Ruskin, Upamanyu in Crossword Awards Shortlist" பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம், Outlook (New Delhi), 28 July 2011.
  3. Ghadiali, Ashish (June 14, 2020). "Bread, Cement, Cactus by Annie Zaidi review – indignation and injustice". தி கார்டியன். https://www.theguardian.com/books/2020/jun/14/bread-cement-cactus-by-annie-zaidi-review-indignation-and-injustice. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Kokra, Sonali (January 26, 2015). "Annie Zaidi: Flunking Science, Acing Poetry". OZY இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210712233706/https://www.ozy.com/the-new-and-the-next/annie-zaidi-flunking-science-acing-poetry/37412/. 
  5. Zaidi, Annie (January 5, 2013). "An Open Letter to Honey Singh". Sunday Guardian. https://www.sundayguardianlive.com/music/748-open-letter-honey-singh. "updated February 13, 2016" 
  6. Singh, Manpriya (November 9, 2017). "Some words, a lot of meaning". The Tribune. https://www.tribuneindia.com/news/archive/lifestyle/some-words-a-lot-of-meaning-494610. 
  7. "Prof. Annie Zaidi". gu.edu.in. Archived from the original on 5 May 2021.
  8. "Vodafone Crossword Book Award 2010". Afternoon Despatch. August 1, 2011. Archived from the original on 4 October 2016.
  9. "TATA Literature Live! Book Of The Year Award - Fiction -". Tata Literature Live! (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_சைதி_(எழுத்தாளர்)&oldid=4108286" இலிருந்து மீள்விக்கப்பட்டது