அன்னி திவ்யா
அன்னி திவ்யா (பிறப்பு 1987) இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார்.
அன்னி திவ்யா | |
---|---|
பிறப்பு | அன்னி திவ்யா பதான்கோட், பஞ்சாப் |
கல்வி | விமானப் பறத்தலில் இளங்கலை |
பணி | விமான ஓட்டி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇந்தியாவின் ஆந்திரப் பிரேதேசத்தை சேர்ந்த அன்னியின் தந்தையார் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இவரது தெலுங்கு பேசும் குடும்பம் வசித்து வந்தது. அந்த கால கட்டத்தில் தான் அன்னி பிறந்துள்ளார். அவரது தந்தை ஓய்வு பெற்ற பிறகு, அவர்களது குடும்பம் ஆந்திராவின் விஜயவாடாவில் குடியேறியது. பள்ளிக்கல்வியை அன்னி அங்கே படித்துள்ளார்.
விமானி வேலை
தொகு17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே, உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்பயிற்சி பள்ளியான இந்திரா காந்தி ராஷ்டிரிய ஊரான் அகாடமியில் (IGRUA) சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் தனது பத்தொன்பதாவது வயதில் பயிற்சியை முடித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது விமானப்பணியை தொடங்கினார். பயிற்சிக்காலத்தில் பல்வேறு வழித்தடங்களிலும், விமானங்களில் சென்றிருந்தாலும் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு போயிங் 737 விமானத்தில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கதாகும். இருபத்தியொரு வயதிலேயே மேற்கொண்டு விமானப்பயிற்சிக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் மிகப்பெரிய விமானமான போயிங் 777 ஐ ஓட்ட கற்றுக்கொண்டார்.[1] மும்பை பல்கலைக்கழகத்தின் ரிஸ்வி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும் பட்டமும் முடித்துள்ளார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Giving wings to her curiosity". thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ "Anny Divya - World's Youngest Woman to Fly a Boeing 777". The Global Indian (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.