அன்வேஷனா (Anveshana) இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் கார்த்திக், பானுப்பிரியா, சத்யநாராயணா , சரத் பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் "சித்தாரா" , " ஆலாபனா" படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சியின் மூன்றாவது படமாகும்.[1] தமிழில் "பாடும் பறவைகள்" என்ற பெயரில் வெளிவந்தது. பறவையியல் ஆர்வம் கொண்ட காவல் அதிகாரி ஒருவன், ஒரு மனிதன் புலியால் கொலை செய்யப்பட, அதன் பின்னர் நடக்கும் தொடர் கொலைகளின் மர்மத்தை தீர்க்க முயற்சிக்க காட்டிற்கு வருகிறான். இந்த தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் இறுதியாகும்.

அன்வேஷனா
இயக்கம்வம்சி
தயாரிப்புகாமினேனி பிரசாத்
கதைவம்சி
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
பானுப்பிரியா
சத்யநாராயணா
சரத் பாபு
ராலபள்ளி
ஒளிப்பதிவுஎ. வி. ராகுல்
படத்தொகுப்புஜிஆர்.. அனில் மல்னாட்
வெளியீடு22 மே 1985
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

கதை தொகு

திரு. ராவ் (சத்யநாராயணா) அவர்களுக்கு பறவைகளின் ஒலிகளிலிருந்து இசையின் தோற்றம் பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிடும் கனவு இருக்கிறது. பாண்டு (ராலபள்ளி) அவரிடம் வண்டியோட்டியாக இருக்கிறார். இதற்காக அவர்கள் காட்டினுள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அருகிலிருக்கும் நகரத்தைச் சேர்ந்த ஹேமாவை (பானுப்பிரியா) புத்தகத்தை எழுதுவதற்கு நியமிக்கிறார். ஜேம்ஸ் (சரத் பாபு) அந்தப் பிரதேசத்தில் ஒரு மனிதன் புலியால் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறார். ராவின் மேலாளராக அமர் (கார்த்திக்) நியமிக்கப்படுகிறார். காட்டில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுகிறது. இது அனைத்தும் புலியால் ஏற்பட்டதென என்று கூறப்படுகிறது. உண்மைக் கொலையாளி யார்? , புலிதான் இக்கொலைகளைச் செய்கிறதா? அமர் யார்? அவர் காட்டிற்கு ஏன் வருகிறார் என்பதெல்லாம் மீதிக் கதை கொண்டு செல்கிறது.

தயாரிப்பு தொகு

1984இல் வெளிவந்த "சித்தாரா" பட இயக்கத்திற்குப் பிறகு, தயாரிப்பாளரான காமினேனி பிரசாத், இயக்குனர் வம்சியை தனது அடுத்தப் படத்திற்காக அணுகினார். இயக்குனர் வம்சி, காட்டில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒரு திகில் கதையை படமாக எடுக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவரே ஒரு புதினத்தை இந்திராகாந்தி படுகொலை நடந்த சமயத்தில் எழுதி முடித்தார். தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால் படவேலைகள் நடந்தேறின.[2]

கலை இயக்குனர் தோட்டா தரணி, திருப்பதி அருகில் உள்ள தலக்கோனா காட்டில் இப் படத்திற்கான கதைக் களத்தை வடிவமைத்தார்.[3] படக் குழுவினர் காட்டின் அருகாமையிலுள்ள 'நெரபாயிலு' கிராமத்தில் தங்கியிருந்தனர்.

தெலுங்கில் நடித்தவர்கள் தொகு

தமிழில் நடித்தவர்கள் தொகு

படக்குழு தொகு

  • இயக்கம் - வம்சி
  • இசை அமைப்பு - இளையராஜா
  • ஒளிப்பதிவு - எம். வி. ரகு
  • படத் தொகுப்பு - அனில் மால்நாத்
  • கலை வடிவமைப்பு - தோட்டா தரணி
  • பின்னணி பாடியவர்கள் - எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • பாடல்கள் - வெட்டூரி சுந்தரராம மூர்த்தி

இசை அமைப்பு தொகு

இளையராஜா இப்படத்திற்கு இசையைமைத்திருந்தார். பாடல் வரிகளை வெட்டூரி சுந்தரமூர்த்தி எழுதியுள்ளார்.[3]

பாடல்கள் தொகு

பாடல் பாடியோர் எழுதியது
"கீரவாணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வெட்டூரி
"ஏகாந்தா வேளா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வெட்டூரி
"எடலோ லயா" எஸ். ஜானகி [வெட்டூரி
"இல்லாலோ" எஸ். ஜானகி வெட்டூரி

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Admin. "Anveshana (1985) – A Retrospective". telugucinema.com. Telugu cinema. Archived from the original on 1 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  2. "Vamsy about his 'Anveshana'". telugucinema.com. Telugucinema. Archived from the original on 30 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 Vamsy. "Director Vamsy Facebook post". facebook.com. Vamsy. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வேஷனா&oldid=3841108" இலிருந்து மீள்விக்கப்பட்டது