அபங்(க்) (மராத்தி: अभंग) அல்லது அபங்கா என்பது இந்திய பக்தி இசையின் ஒரு வகை. அபங்க் பாடல்கள் அனைத்துமே விட்டலரைப் போற்றிப் பாடுபவை.

ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்ற வர்க்காரித் துறவிகளே இந்த அபங்க் பாடல்களைப் பாடியோருள் முக்கியமானோர். வர்க்காரித் துறவிகள் பண்டரிபுரம் நோக்கிச் செல்லும் வாரி எனும் யாத்திரையின் போது இந்த அபங்க் பாடல்களைப் பாடுவர். இவை எளிமையாகவும் துள்ளல் இசையுடனும் அமைந்திருப்பவை.

சமஸ்கிருதம் மட்டுமே சமய மொழியாகவும் பிராமணர்களே பெரும்பாலும் குருமார்களாக இருந்த நிலையில் பிராமணர் அல்லாத வர்க்காரித் துறவிகள் மக்களின் மொழியில் (மராத்தி) பாடிய அபங்க் பாடல்கள் சாதாரண மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

“தீர்த்த விட்டலா, ஷேத்ர விட்டலா, தேவ விட்டலா, தேவ பூஜா விட்டலா”

“பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா”

“விட்டலா விட்டலா ஜெய ஜெய விட்டலா”

என்பது போன்ற எளிமையான வரிகளை இப்பாடல்களில் காணலாம்.

அபங்க் பாடல்களைப் பாடும் கருநாடக இசைக் கலைஞர்களுள் அருணாசாயிராம் குறிப்பிடத்தக்கவர்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "தி ஹிந்து நாளிதழ் செய்தி". May 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புதொகு

அருணா சாயிராம் - அபங் பாடல் காணொளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபங்&oldid=1724613" இருந்து மீள்விக்கப்பட்டது