நாமதேவர்
துறவி நாம்தேவ் (29 அக்டோபர், 1270–1350) (மராத்தி: संत नामदेव) பொ.ஊ. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வர்க்காரி வைணவத் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் உள்ள நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய்.
நாமதேவர் | |
---|---|
நாமதேவர் | |
பிறப்பு | பொ.ஊ. அண். 26 அக்டோபர் 1270 நர்சி-பாமனி, ஹிங்கோலி மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
இறப்பு | பொ.ஊ. அண். 3 சூலை 1350 பண்டரிபுரம் |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | வர்க்காரி, இந்து சமயம் / சீக்கியம் |
இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.[1] இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து பகவான் விட்டலரின் பெரும் பக்தனாக வாழ்ந்தவர்.[2] விட்டலர் மீது பல பதிகங்களைப் பாடியவர். இவரது பாடல்களில் சில சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது சீடர்களில் ஒருவர் ஜனாபாய் ஆவார்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நாமதேவர் வரலாறு -காணொலி (தமிழில்)
- நாம்தேவ் பற்றிய சமூக வலைதளம் (ஆங்கில மொழியில்)
- துறவி நாம்தேவ் மகாராஜ் பரணிடப்பட்டது 2012-10-25 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
- துறவி நாம்தேவ் பரணிடப்பட்டது 2012-04-08 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
- Religion and public memory By Christian Lee Novetzke(ஆங்கில மொழியில்)
- துறவி நாம்தேவ் இந்துப்பீடியாவில் (ஆங்கில மொழியில்)