அபினைன் மலைத்தொடா்
அபினைன் மலைகள் (Apennines[1] அல்லது Apennine Mountains, /ˈæpənaɪn/; கிரேக்கம்: Ἀπέννινα ὄρη;[2] என்பவை இத்தாலிய தீபகற்பத்தின் முதுகெலும்பாகும். இம்மலைத்தொடர் ஆல்ப்சு மலையின் தொடர்ச்சியாகும்.[3] இம்மலைத்தொடரானது இணையான சிறு சங்கிலி போன்ற மலைத் தொடர்களைக் கொண்டது. அவை தீபகற்ப இத்தாலியின் நீளத்திற்கு இணையாக சுமார் 1200 கி.மீ நீளமானது. வடமேற்கில் இவை அல்டேரில் உள்ள லிகுரியன் ஆல்ப்ஸ் தொடரோடு வந்து இணைகிறது. தென்மேற்கில் தீபகற்ப இத்தாலியின் நுனியில் உள்ள ரெக்கியோ டி காபலிபாரியா எனும் கடற்கரை பகுதியில் வந்து முடிவடைகிறது.[4] 2000 ஆம் வருடத்தில இருந்து இத்தாலிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஐரோப்பியாவின் அபினைன் பூங்கா செயல் திட்டம் மூலம் அபினைன் மலைத்தொடரை வரையறுக்க முயற்சி செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் 1500 கி.மீ நீளத்திற்கான வட சிசிலிய மலைத் தொடர்களை சேர்க்க முயற்சி செய்கிறது. இந்த அமைப்பானது ஒரு பரிதியை உருவாக்கி லிக்குரியன் மற்றும் டிர்ரிஹெனின் கடல்பகுதியை மூட முயற்சிக்கிறது.[5]
அப்பினீன் மலைகள் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உச்சி | கோர்னோ கிராண்ட் |
உயரம் | 2,912 m (9,554 அடி) |
ஆள்கூறு | 42°28′9″N 13°33′57″E / 42.46917°N 13.56583°E |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,200 km (750 mi) வடமேற்கு முதல் தென்கிழக்கு வரை |
அகலம் | 250 km (160 mi) தென்மேற்கு முதல் வடகிழக்கு வரை |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | Monti Appennini (இத்தாலிய மொழி) |
புவியியல் | |
நாடுகள் | இத்தாலி மற்றும் சான் மரீனோ |
தொடர் ஆள்கூறு | 43°16.9′N 12°34.9′E / 43.2817°N 12.5817°E |
நிலவியல் | |
பாறையின் வயது | பாறை உருவாக்கத்திற்கான மெசோசோயிக், ஓரோஜெனிக்கான நியோஜீன்-குவாட்டர்னரி |
பாறை வகை | அபினைன் மடிப்பு |
அபினைன் சில பழுதுபடாத சுற்றுச் சூழலை தன்னகத்தே பாதுகாத்து வைத்துள்ளது. அது மனித தலையீட்டிற்கும் தப்பிய சில பகுதிகள் ஆகும். இவற்றில் சில அருமையான காடுகளும் ஐரோப்பாவின் மலைப் புல்வெளிகளும் அடங்கும். தற்போது அவை தேசிய பூங்காக்களால் பாதுகாக்கப் படுகிறது. அவற்றுள் பல்முகத் தன்மை கொண்ட அரிய வகை தாவரங்களும் விலங்குகளும் அடங்கும். இம்மலைத் தொடர் ஐரோப்பாவின் வேட்டையாடும் மாமிச் உண்ணிகளுக்கு ஒரு அடைக்கல பிரதேசம் ஆகும். மத்திய ஐரோப்பாவில் அழிந்து கொண்டு இருக்கும் இத்தாலிய ஓநாய் மாரிசன் பழுப்பு கரடி ஆகியவை அடங்கும்.
இத்தாலியின் மிகப் பெரிய பரப்பான அபினைன் தீபகற்ப பகுதி இம்மலைத் தொடரின் பெயரால் அழைக்கப் படுகிறது. இம்மலைத் தொடர் பொதுவாக பசுமையானது ஆனால் அதன் மிக உயரமான கார்னோ கிராண்டே மலையுச்சியில் கால்டரோன் எனும் பனிப் பாறைகள் காணப்படுகிறது.[6] இதுதான் இம்மலைத் தொடரின் ஒரே பனிப் பாறையாகும். கிஅழக்கு பாகத்தில் அட்ரியாடிக் கடல் பகுதி வரை உள்ள மலைச்சரிவானது செங்குத்தானது. அதேவேளையில் மேற்கு பகுதியின் மலைச் சரிவானது மலை அடிவாரத்தை உருவாக்குகிறது. இவற்றில்தான் இத்தாலிய தீபகற்பத்தின் அநேக நகரங்கள் உள்ளன. இம்மலைத் தொடரில் காணப்படும் குன்றுகளுக்கு அவை இருக்கும் இடத்தில் உள்ள நகரத்தின் பெயர் சூட்டப் படுகிறது. லிகுரியன் மலைப்பகுதி லிகுரியன் நகரத்தில் உள்ளது. மலை மொத்த நீளம் அண். 1,200 கிமீ ஆகும். இவற்றின் கிளைகளும் அடிவாரங்களும் இத்தாலிய முந்நீரகத்தின் பெரும்பரப்பினைக் கொண்டுள்ளன. அப்பினீன் மலையுச்சிகளுள் பெரியது கிரான் சாசோ என்பதாகும். இதன் உயரம் 3154 மீ. இம்மலைத்தொடர் பகுதியாகத் தான் வெசுவியசு என்னும் எரிமலை நேபில்சு நகருக்கருகில் உள்ளது. அபினைன் மலைத்தொடர் இத்தாலிய முந்நீரகத்திற்கு நீர்வளத்தைத் தருவதாகும். உரோமானியர் இத்தொடரின் கணவாய்களி்ல வசதியான சாலைகளை உருவாக்கினர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Apennines, Merriam-Webster Dictionary definition, on-line on www.merriam-webster.com
- ↑ இசுட்ராபோ, Geography, book 5
- ↑ Gambino, Roberto; Romano, Bernardino (2000–2001). Territorial strategies and environmental continuity in mountain systems: The case of the Apennines (Italy) (PDF). World Commission on Protected Areas.
- ↑
James, Kristen (2004), Determining the source for the magmas of Monte Amiata (Central Italy) using strontium, neodymium, and lead isotopes, Carleton Geology Department: Geology Comps Papers, pp. 3–4, S2CID 43061617,
During the Neogene and into the Quaternary the region around Amiata underwent a general NNE contraction .... This compression also created the Apennine orogeny of east-central Italy .... This area was brought above sea level during a doming phase during the Middle Pliocene.
- ↑ "Apenninus". A Latin Dictionary. (1879). Oxford; Medford: Clarendon Press; Perseus Digital Library.
- ↑ van Dijk, J.P.; Bello, M.; Brancaleoni, G.P.; Cantarella, G.; Costa, V.; Frixa, A.; Golfetto, F.; Merlini, S. et al. (2000). "A new structural model for the northern sector of the Calabrian Arc". Tectonophysics 324 (4): 267–320. doi:10.1016/S0040-1951(00)00139-6. Bibcode: 2000Tectp.324..267V.
- ↑ வாழ்வியற் களஞ்சியம்- தொகுதி ஒன்று. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், பக்கம்- 384-385
வெளி இணைப்புகள்
தொகு- "Italy". Catholic Online. அணுகப்பட்டது 21 February 2010.
- "Ligurian Apennine". Summit Post. 2006. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
- "Ligurian Apennine". Summit Post. 2006. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
- "Italian Cultural Landscapes: wood-pasture and wood-meadow in the Ligurian-Tuscan-Aemilian Apennines, Italy". The ECL project. Archived from the original on 17 September 2007. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
- "Appenine [sic] deciduous montane forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
- Irlam, Michael J. (2009). "The Great Apennine Tunnel". Mike's Railway History. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
- "10th Mountain Division – The Formative World War II Years". Dartmouth College Class of 1965. 2008. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.