அபோ தேன்சிட்டு

அபோ தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஏ. போல்தோனி
இருசொற் பெயரீடு
ஏதோபைகா போல்தோனி
மெர்ன்சு, 1905

அபோ தேன்சிட்டு (Apo Sunbird)(ஏதோபைகா போல்தோனி) என்பது நெக்டரினிடே என்ற பறவை குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் உள்ள மிண்டனாவோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இந்தச் சிற்றினம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படவில்லை. இதன் சிறிய வாழிட வரம்பில் பொதுவானதாக உள்ளது.

வகைப்பாட்டியல் தொகு

அபோ தேன்சிட்டு 1905ஆம் ஆண்டு அமெரிக்க பறவையியலாளர் எட்கர் அலெக்சாண்டர் மெர்ன்சால் பிலிப்பைன்சீன் மிண்டனாவோ தீவில் உள்ள அபோ மலையிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து முறையாக விவரிக்கப்பட்டது. இவர் இதற்கு ஏதோபைகா போல்தோனி எனப் பெயரிட்டார்.[2]

இச்சிற்றினத்தின் கீழ் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]

  • ஏ. போ. மலிண்டாங்கென்சிசு ராண்ட் & ரபோர், 1957 - மேற்கு மிண்டனாவோ
  • ஏ. போ. போல்தோனி மெர்ன்சு, 1905 - கிழக்கு-மத்திய, கிழக்கு மிண்டனாவோ
  • ஏ. போ. தபோலி கென்னடி, ஆர். எசு. கோன்சலேசு & மிராண்டா, 1997 - தெற்கு மிண்டனாவோ

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2020). "Aethopyga boltoni". IUCN Red List of Threatened Species 2020: e.T22718059A179061446. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22718059A179061446.en. https://www.iucnredlist.org/species/22718059/179061446. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. Edgar Alexander Mearns (1905). "Descriptions of a new genus and eleven new species of Philippine birds". Proceedings of the Biological Society of Washington 18: 1–8 [4–5]. https://www.biodiversitylibrary.org/page/2265458. 
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Dippers, leafbirds, flowerpeckers, sunbirds". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபோ_தேன்சிட்டு&oldid=3826802" இலிருந்து மீள்விக்கப்பட்டது