அப்சரா ரெட்டி

அப்சரா ரெட்டி, (பிறப்பு அஜய் ரெட்டி)  இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை அரசியல்வாதியும்  பத்திரிகையாளரும்[1] சமூக ஆர்வலருமாவார். 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட இவர் [2],  8 ஜனவரி 2018 அன்று, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து, மகிளா காங்கிரஸின் முதல் திருநங்கை பொதுச்செயலாளர் பெருமையைப் பெற்றுள்ளார், மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பி, 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக மாநிலத் தேர்தலில் அதன் நட்சத்திரப் பிரச்சாரகராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளார்.[3]

அப்சரா ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசென்னை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ஏப்ரல் 2020 முதல்)
வேலைமூத்த பத்திரிகையாளர்/அரசியல்வாதி/சமூக ஆர்வலர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

அப்சரா, மோனாஷ் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையியலில் இளங்கலை பட்டமும், லண்டனில் உள்ள லண்டன் நகரப் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி பொருளாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி ஒளிபரப்பில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். மோனாஷ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர் சேவையின் தலைவராக இருந்துள்ளார்.[4]

தொழில் வாழ்க்கை

தொகு

அப்சரா, பிபிசி உலக சேவை, தி இந்து, லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகம்,[5] நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் குரோனிக்கிள் ஆகிய நிறுவனங்களில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். நுகர்வோர், அரசியல், பிரபலங்களின் வாழ்க்கை முறை மற்றும் கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கட்டுரைப் பத்திகளை எழுதியுள்ளார். அவர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட், F1 ரேசர் மைக்கேல் ஷூமேக்கர், ஏஆர் ரஹ்மான் மற்றும்ஆங்கில திரைப்பட உச்ச நட்சத்திரமான நிக்கோலஸ் கேஜ் ஆகியோரை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து சுனாமிபேரலையின் ஆக்ரோஷத்தை நேரடியாக சென்று வெளியிட்டுள்ளார்..[6]

அப்சரா, தமிழ்நாட்டில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். மேலும் மெல்போர்னில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதரக ஜெனரல் டாக்டர் டி.ஜே. ராவின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.  

UNICEF உடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சுகாதார பிரச்சாரத்தையும் அப்சரா சிறிதுகாலம் மேற்கொண்டுள்ளார். மாட்ரிட்டில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்ற அமர்வு, உலகப் பெருமை உச்சி மாநாடு, UNICEF மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ், நாஸ்காம் இந்தியா போன்ற உயர்மட்ட நிறுவனங்கள் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட மேடைகளிலும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு தொடங்கி, தந்தி டிவியில் ஒளிபரப்பான நட்புடன் அப்சரா என்ற தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

அரசியல்

தொகு

மே 2016 இல், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சேர்ந்துள்ளார்.[7] முன்னதாக, அவர் பிப்ரவரி 2016 ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.[8][9][10] ஜனவரி 2019 ஆண்டில், ராகுல் காந்தியால் அகில இந்திய மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.[11] நவம்பர் 2020 இல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 க்கு முன்னதாக அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்து அதன் நட்சத்திரப் பிரச்சாரகராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளார்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. ""எனக்கு நானே ஒரு கிஃப்ட்!" - அப்சரா ரெட்டி | அப்சரா ரெட்டி". www.vikatan.com/. 2013-07-11. Archived from the original on 12 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
  2. 2.0 2.1 "After Khushbu Sundar, Apsara Reddy deserts Congress, to rejoin AIADMK".
  3. "Apsara Reddy, Congress Party's First Transgender Office-Bearer, On Life, Love And Politics". HuffPost (in ஆங்கிலம்). 2019-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
  4. "Meet Apsara Reddy, Congress's first transgender women's wing general secretary". Qrius (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  5. "Apsara Reddy Becomes First Transgender Office-bearer In Congress's History". FIFTY SHADES OF GAY (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-01-09. Archived from the original on 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  6. "Congress appoints transgender activist Apsara Reddy as general secretary of its women wing". NewsX (in ஆங்கிலம்). 2019-01-08. Archived from the original on 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
  7. "Chennai 360 – Chennaionline". chennaionline.com.
  8. "From lotus to two leaves in a jiffy". https://www.thehindu.com/news/national/tamil-nadu/from-lotus-to-two-leaves-in-a-jiffy/article8582729.ece. 
  9. Meet Apsara Reddy, latest sensational Politician from BJP
  10. Vasudevan, Shilpa (April 2, 2016). "Third gender pitches for lead role in politics". The Times of India.
  11. "Congress appoints Apsara Reddy as the first transgender National General Secretary of AIMC". http://newsd.in/congress-appoints-apsara-reddy-as-the-first-transgender-officer-bearer/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரா_ரெட்டி&oldid=3937798" இலிருந்து மீள்விக்கப்பட்டது