ஏ. ஆர். அந்துலே

இந்திய அரசியல்வாதி
(அப்துல் ரகுமான் அந்துலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்துல் ரகுமான் அந்துலே (9 பெப்ரவரி 1929 – 2 திசம்பர் 2014) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். பதினான்காவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஊழலுக்காக பம்பாய் உயர் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அப்துல் ரகுமான் அந்துலே
अब्दुल रेहमान अंतुले
7வது மகாராட்டிர முதலமைச்சர்
பதவியில்
9 சூன் 1980 – 12 சனவரி 1982
முன்னையவர்சரத் பவார்
பின்னவர்பாபாசாகேப் போசலே
இந்திய நாடாளுமன்றம்
கொலாபா
பதவியில்
1989–1998
முன்னையவர்தின்கர் பாடீல்
பின்னவர்இராம்சேத் தாக்கூர்
பதவியில்
2004–2009
முன்னையவர்இராம்சேத் தாக்கூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-02-09)9 பெப்ரவரி 1929
இறப்பு2 திசம்பர் 2014(2014-12-02) (அகவை 85)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அந்துலே காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ராய்காட் மக்களவைத் தொகுதியில் ஆனந்த் கீத்தேயிடம் தோற்றார்.

பிறப்பு

தொகு

மகாராட்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் அம்பேத் சிற்றூரில் அஃபீசு அப்துல் கஃபூருக்கும் சோராபிக்கும் மகனாக 9 பிப்ரவரி 1929 ல் பிறந்தார்.

கல்வி

தொகு

இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர் சட்டவியல் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்திலும்இலண்டனில் உள்ள லிங்கன் இன்னிலும் படித்தார்.

குடும்பம்

தொகு

நர்கீசு என்ற மனைவியும், ஒரு மகனும் மூன்று மகள்களும் அந்துலேக்கு உள்ளனர்.

சட்ட மன்றத்தில்

தொகு

மகாராட்டிர சட்டமன்றத்தில் 1962இலிருந்து 1976 வரை பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1] இந்தக் காலத்தில் சட்டம், நீதித்துறை துணை அமைச்சராகவும் துறைமுகங்கள், மீன்வளத்துறை அமைச்சராகவும் கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

  • 1985இல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

முதலமைச்சர்

தொகு
  • 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 09 சூன் 1980 முதல் 12 சனவரி 1982 வரை மகாராட்டிர முதலமைச்சராகப் பணியாற்றினார். ஊழல் மற்றும் மிரட்டிப் பணம்பறித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.[3]

நாடாளுமன்றத்தில்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._அந்துலே&oldid=3926561" இலிருந்து மீள்விக்கப்பட்டது