அப்போட்டாபாத் மாவட்டம்
அப்போட்டாபாத் மாவட்டம் (Abbottabad District) (ضِلع ایبٹ آباد}, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் அப்போட்டாபாத் ஆகும். [3] இம்மாவட்டம் 1,969 சகிமீ பரப்பளவு கொண்டது.
அப்போட்டாபாத் மாவட்டம்
ایبٹ آباد | |
---|---|
மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 34°00′N 73°00′E / 34.000°N 73.000°E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 1853 |
தலைமையிடம் | ஆப்டாபாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,967 km2 (759 sq mi) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மொத்தம் | 13,32,912 |
• அடர்த்தி | 680/km2 (1,800/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் நேரம்) |
ஒன்றியக் குழுக்கள் | 51 |
வருவாய் வட்டங்கள் | 2 |
இணையதளம் | www |
எல்லைகள்
தொகுஅப்போட்டாபாத் மாவட்டத்தின் வடக்கில் மன்செரா மாவட்டம், கிழக்கில் முசாஃபராபாத் மாவட்டம், மேற்கில் ஹரிபூர் மாவட்டம் மற்றும் தெற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
வரலாறு
தொகுபெயர்க் காரணம்
தொகுபிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் ஹசாரா கோட்டத்தின் முதல் ஆணையாளராக பணிபுரிந்த பிரித்தானிய இராணுவ மேஜர் ஜேம்ஸ் அப்போட் நினைவாக இம்மாவட்டத்திற்கு அப்போட்டாபாத் என பெயரிடப்பட்டது.[4] தற்போதைய அப்போட்டாபாத் மாவட்டம், முன்னர் ஹசாரா மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டமாக இருந்தது.
புவியியல்
தொகுஇம்மாவட்டத்தின் கிழக்கில் பாயும் ஜீலம் ஆறு, அப்போட்டாபாத் மாவட்டத்தையும், பூஞ்ச் மாவட்டத்தையும், இராவல்பிண்டி மாவட்டத்தையும் பிரிக்கிறது. மலைக்காடுகள் மிக்க இம்மாவட்டத்தில் தோர் மற்றும் ஹர்ரோ ஆறுகள் பாய்கிறது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,16,534 குடியிருப்புகள் கொண்ட அப்போட்டாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 13,32,912 ஆகும். அதில் 6,77,570 ஆண்கள் ; பெண்கள் 6,55,281 ஆகவும்; மூன்றாம் பாலித்தவர்கள் 61 ஆகவுள்ளனர்.[5]இம்மாவட்டத்தில் இந்துகோ மொழியை 94.58% மக்கள் பேசுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம்
தொகுஅப்போட்டாபாத் மாவட்ட்டம் அப்போட்டாபாத் மற்றும் ஹவேலியன் என இரண்டு வருவாய் வட்டங்களும்[6] இமமாவட்டத்தில் நவன்செர் நகராட்சியும், 51 ஒன்றியக் குழுக்களும் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஹவேலான் இராணுவப் பாசறையும் உள்ளது.
அரசியல்
தொகுகைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றத்திற்கு இம்மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Abbottabad District at a Glance". Islamabad: Population Census Organization. Archived from the original on January 2, 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
- ↑ Geography of District Abbottabad பரணிடப்பட்டது நவம்பர் 29, 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ IUCN Pakistan (2004). Abbottabad – State of the environment and Development. IUCN Pakistan and Khyber Pukhtoonkhwa: Karachi, p. 2.
- ↑ District Abbottabad Population 2017
- ↑ "Sherwan", Wikipedia (in ஆங்கிலம்), 2019-05-31, பார்க்கப்பட்ட நாள் 2019-08-06
- ↑ PF-48 (Abbottabad-V) Result: Announced பரணிடப்பட்டது 2012-11-15 at the வந்தவழி இயந்திரம்