அமர காவியம் (2014 திரைப்படம்)

நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில், ஜீவா சங்கரின் இயக்கத்தில் , ஆர்யாவின் தம்பி சத்யா நடித்து, 2014 ஆம்

அமர காவியம் (Amara Kaaviyam) ஜீவா ஷங்கர் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யா, மியா மற்றும் பலர் நடுத்துள்ளனர். நடிகர் ஆர்யா தயாரிப்பில், ஜிப்ரானின் வெற்றிக்கரமான இசை அமைப்பில், 5 செப்டம்பர் 2014 ஆம் தேதி வெளியானது.

நடிகர்கள் தொகு

 • சத்யா
 • மியா (தமிழில் அறிமுகம்)
 • ஆனந்த் நாக்
 • தம்பி ராமையா
 • சுதீபா பிங்கி
 • ரிந்து ரவி
 • அரௌல் ஜோடி
 • வைத்தியநாதன்
 • எலிசபெத்
 • சூப்பர்குட் சுப்பிரமணி.

கதைச்சுருக்கம் தொகு

ஜீவா (சத்யா) நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது தனது கடந்த காலத்தை நினைத்துப்பார்ப்பதிலிருந்து படம் துவங்குகிறது. 1989 யில், 12ஆம் வகுப்பில், ஜீவாவின் நண்பன் பாலாஜி (ஆனந்த் நாக்) சக மாணவி கார்த்திகாவை (மியா) காதல் செய்கிறான். ஆனால், கார்த்திகா ஜீவாவை காதல் செய்கிறாள். அந்நிலையில், ஜீவாவின் தந்தை இறந்து போக, ஜீவாவின் தாய் மறுமணம் செய்துகொள்கிறார். போலீசில் அகப்பட்டுக்கொள்ளும் ஜீவா-கார்த்திகா ஜோடியை பற்றி அவரவர் குடும்பங்களுக்கு தெரியவருகிறது. மன்னிப்பு கேட்க வரும் ஜீவாவை கார்த்திகாவின் தந்தை அடித்து விட, ஜோடி பிரிய நேரிடுகிறது. பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, தன்னை காதலில் ஏமாற்றிய காரணத்திற்காக கார்த்திகாவை கொலை செய்ய முடிவு செய்கிறான் ஜீவா. இறுதியில், ஜீவா-கார்த்திகா ஜோடிக்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு தொகு

6 பாடல்களை கொண்ட இசைத்தொகுப்பு 28 ஜூன் 2014 ஆம் தேதி சத்யம் சினிமாஸில் வெளியானது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். மதன் கார்க்கி, பார்வதி, அஸ்மின், வெற்றிச்செல்வன் ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். பாடல்களும், பின்னணி இசையும் நல்ல பாராட்டுகளை பெற்றன.[1]

தயாரிப்பு தொகு

ஜீவா ஷங்கர், தனது முந்தைய படம் நான் (2012) வெற்றி பெற்றதை தொடர்ந்து, 1980 - களில் நடக்கும் காதல் கதையை எழுதினார்.[2] துவக்கத்தில் மதன் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில், அதர்வா நடிப்பதாக இருந்தது.[3][4] பின்னர், ஆர்யா தயாரிப்பில், சத்யா நடிப்பதாக செப்டம்பர் 2013-யில் முடிவானது.[5][6]

வெளியீடு தொகு

இந்தத் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியது.[7]

வரவேற்பு தொகு

இந்தப்படம் கலந்த விமர்சனத்தைப் பெற்றது.[8][9][10][11]

மேற்கோள்கள் தொகு

 1. "http://www.sify.com/movies/amara-kaaviyam-review-tamil-15058249.html". http://www.sify.com/movies/amara-kaaviyam-review-tamil-15058249.html. 
 2. "http://www.indiaglitz.com/channels/tamil/article/93481.html". http://www.indiaglitz.com/channels/tamil/article/93481.html. 
 3. "http://articles.timesofindia.indiatimes.com/2013-05-04/news-interviews/39026337_1_film-jeeva-shankar-madhan". http://articles.timesofindia.indiatimes.com/2013-05-04/news-interviews/39026337_1_film-jeeva-shankar-madhan. 
 4. "http://articles.timesofindia.indiatimes.com/2013-05-12/news-interviews/39202964_1_film-naan-atharvaa". http://articles.timesofindia.indiatimes.com/2013-05-12/news-interviews/39202964_1_film-naan-atharvaa. 
 5. "http://behindwoods.com". http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/exclusive-arya-planns-with-naan-jeeva-shankar-naan-jeeva-shankar-21-08-13.html. 
 6. "http://articles.timesofindia.indiatimes.com/". http://articles.timesofindia.indiatimes.com/2013-09-15/news-interviews/42062722_1_actor-sathya-atharvaa-next-film. 
 7. "http://www.satelliterights.com/amara-kaaviyam-movie-premier-on-vijay-tv/". http://www.satelliterights.com/amara-kaaviyam-movie-premier-on-vijay-tv/. 
 8. "http://www.ibtimes.co.in/amara-kaaviyam-review-round-fails-impress-608414". http://www.ibtimes.co.in/amara-kaaviyam-review-round-fails-impress-608414. 
 9. "http://behindwoods.com/tamil-movies/amara-kaaviyam/amara-kaaviyam-review.html". http://behindwoods.com/tamil-movies/amara-kaaviyam/amara-kaaviyam-review.html. 
 10. "http://www.thehindu.com/". http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/amara-kaaviyam-review-teen-ache-trauma/article6386126.ece. 
 11. "http://www.rediff.com". http://www.rediff.com/movies/report/review-amara-kaaviyam-does-not-warm-your-heart-south/20140905.htm. 

வெளி-இணைப்புகள் தொகு