அமாணா அல்லது மலேசிய தேசிய நம்பிக்கை கட்சி (ஆங்கிலம்: National Trust Party (AMANAH); மலாய்: Parti Amanah Negara; சீனம்: 國家誠信黨) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[3] இந்தக் கட்சியின் தலைவராக முகமது சாபு இருக்கிறார்.

அமாணா
National Trust Party
Parti Amanah Negara
國家誠信黨
ڤرتي أمانه نڬارا
தேசிய நம்பிக்கை கட்சி
தலைவர்முகமது சாபு
செயலாளர் நாயகம்முகமது பயிஸ் படில்
நிறுவனர்கங்கா நாயர்
பொது ஆலோசகர்அகமது அவாங்
துணைத் தலைவர்முஜாகித் யூசோப் ராவா
பெண்கள் தலைமைசிதி மரியா மகமூத்
இளைஞர் தலைமைமுகமது சனி ஆமான்
தொடக்கம்தொழிலாளி கட்சி; 1978
தேசிய நம்பிக்கை கட்சி; 16 செப்டம்பர் 2015
பிரிவுமலேசிய இசுலாமிய கட்சி (PAS)
தலைமையகம்Wisma AMANAH Negara, No. 73 Tingkat 1, Jalan Seri Utara 1,
கோலாலம்பூர் [1]
உறுப்பினர்  (2015, அக்டோபர்)50,000[2]
கொள்கைஇசுலாமிய நவீனத்துவம்,
இசுலாமிய ஜனநாயகம்,
சமூக தாராளவாதம்,
இஸ்லாமிய சோசலிசம்
தேசியக் கூட்டணிபாக்காத்தான் அரப்பான் (2015 – தற்போது வரையில்)
நிறங்கள்     Orange
மலேசிய மேலவை
3 / 70
மலேசிய மக்களவை
8 / 222
சட்டமன்றத் தொகுதிகள்
12 / 611
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
இணையதளம்
amanah.org.my

அரசியல் அடிப்படையில் இசுலாத்தின் சீர்திருத்தவாதத்தை ஆதரிக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அப்போதைய ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட கட்சியாக அமாணா கட்சி விளங்கியது.[4][5]

2015-ஆம் ஆண்டில் இந்தக் கட்சியும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.

பொது

தொகு

சூன் 2015 மலேசிய இசுலாமிய கட்சியின் தேர்தலில், அக்கட்சியின் முற்போக்கு இசுலாமியத் தலைவர்கள் சிலர் தோல்வியுற்றனர். அவர்களின் அப்போதைய குழுவான கெராக்கான் அராப்பான் பாரு (Gerakan Harapan Baru) எனும் குழுவிடம் அமாணா கட்சி, ஆகஸ்டு 2015-இல் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அமாணா கட்சி மலேசிய தொழிலாளர் கட்சி (Malaysia Workers' Party) என அறியப்பட்டது.

பாஸ் கட்சியின் முந்தைய முற்போக்கு இசுலாமியத் தலைவர்களின் குழு, பின்னர் 16 செப்டம்பர் 2015-இல், மலேசிய தொழிலாளர் கட்சியை ஓர் இசுலாமிய சீர்திருத்தவாதக் கட்சியாக மறுவரையறை செய்தது. அமாணா கட்சி, மலேசிய மக்களவையில் தற்போது எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆளும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் நான்கு கூறு கட்சிகளில் அமாணா கட்சியும் ஒரு க்ட்சியாகச் செயல்படுகிறது..

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hubungi Kami". 23 December 2016.
  2. "Amanah gets 50k membership applications, 12k from Kelantan - Malaysiakini".
  3. Adrian Lai (31 August 2015). "GHB to form new Islamic party under existing political vehicle". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
  4. Rahmah Ghazali (31 August 2015). "GHB announces setting up of Parti Amanah Negara". The Star. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
  5. "GHB ambil alih Parti Pekerja Malaysia" (in மலாய்). Berita Harian. 31 August 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாணா&oldid=4093616" இலிருந்து மீள்விக்கப்பட்டது