அமினோதயசோல்

வேதிச் சேர்மம்

2-அமினோதயசோல் (2-Aminothiazole) என்பது C3H4N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு பல்லின வளைய அமீனாக தயசோல் உள்ளகத்துடன் இச்சேர்மம் தோன்றுகிறது. வளைய ஐசோதயோயூரியா என்றும் இச்சேர்மத்தை வகைப்படுத்தலாம். பிரிடின் போன்ற நெடியை உடைய இச்சேர்மம் நீர், ஆல்ககால்கள் மற்றும் டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரைகிறது. கந்தக மருந்துகள், உயிர்க்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், சாயங்கள், வேதி வினை முடுக்கிகள் போன்ற பல்வகையான வேதிப்பொருட்களை தயாரிக்க உதவும் வினைகளை தொடங்கும் பொருளாகப் பயன்படுகிறது.

அமினோதயசோல்
Skeletal formula of aminothiazole
Space-filling model of the aminothiazole molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-தயசோல்-2-அமீன்
வேறு பெயர்கள்
2-தயசோலமீன், அமினோதயசோல், 2-தயசைலமீன், பேசுடால், 2-தய்சோலைலமீன், 4-தயசோலின்-2-ஓனிமைன், 2-அமினோ-1,3-தயசோல், அப்டோல்
இனங்காட்டிகள்
96-50-4 Y
ChEBI CHEBI:40782 N
ChEMBL ChEMBL344760 Y
ChemSpider 2070 Y
InChI
  • InChI=1S/C3H4N2S/c4-3-5-1-2-6-3/h1-2H,(H2,4,5) Y
    Key: RAIPHJJURHTUIC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H4N2S/c4-3-5-1-2-6-3/h1-2H,(H2,4,5)
    Key: RAIPHJJURHTUIC-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02479 Y
பப்கெம் 2155
  • c1csc(n1)N
UNII 5K8WKN668K Y
பண்புகள்
C3H4N2S
வாய்ப்பாட்டு எடை 100.14 g·mol−1
தோற்றம் இளமஞ்சள் படிகங்கள்
உருகுநிலை 86 முதல் 89 °C (187 முதல் 192 °F; 359 முதல் 362 K)
கொதிநிலை 117 °C (243 °F; 390 K) (20 எக்டோபாசுக்கல்)
100 கி/லி (20 °செல்சியசு)
-56.0•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
Autoignition
temperature
600 °C (1,112 °F; 873 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கச் சிகிச்சையின் போது தைராய்டு மட்டுப்படுத்தியாகவும், பாக்டீரியா எதிர்ப்பியாகவும் பயன்படுகிறது. இதற்கு மாற்றாக இதன் டார்ட்டரேட்டு உப்பும் பயனாகிறது. புரதப் பிழையால் பாதிக்கப்பட்டு உருவாகும் நரம்புமூலச்செல்புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு அமினோதயசோல் பயன்படுத்தலாமென்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன [1].

இரண்டாம் வகை டோப்போ ஐசோமரேசான வோசாரோக்சின் என்ற கார்பாக்சிலிக் அமிலத்தை தயாரிக்கப் பயன்படுகிறது என்பதே நன்கு அறியப்பட்ட பயனாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Gallardo-Godoy A; Gever J; Fife KL; Silber BM; Prusiner SB; Renslo AR. (Feb 24, 2011). "2-Aminothiazoles as therapeutic leads for prion diseases.". J Med Chem 54 (4): 1010–21. doi:10.1021/jm101250y. பப்மெட்:21247166. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோதயசோல்&oldid=4169980" இலிருந்து மீள்விக்கப்பட்டது