அமினோமெத்தனால்

அமினோமெத்தனால் (Aminomethanol) என்பது CH5NO [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை மெத்தனாலமீன் என்ற பெயராலும் அழைக்கலாம். இதுவோர் எளிய அமினோ ஆல்க்கால் சேர்ம்மாகக் கருதப்படுகிறது. ஒரு முதல்நிலை அமீன், ஒரு முதல்நிலை ஆல்க்கால் ஆகிய இரண்டும் இச்சேர்மத்தில் உள்ளன. இவ்விரு குழுக்களும் ஒரே கார்பன் அணுவில் இணைந்திருக்கின்றன. எளிய எமியமினால் என்றும் இச்சேர்மம் கருதப்படுகிறது. பார்மால்டிகைடு மற்றும் அமோனியா இவ்விரண்டிலிருந்தும் வருவிக்கப்படும் வேதி வினைக்குழு எமியமினால் எனப்படும் [2]. மற்ற அமீன்களைப் போல மெத்தனாலமீன் ஒரு வலிமையற்ற காரமாக செயற்படுகிறது [3].

அமினோமெத்தனால்
Methanolamine structural formula
Aminomethanol ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமினோமெத்தனால்
வேறு பெயர்கள்
மெத்தனாலமீன்
இனங்காட்டிகள்
3088-27-5 Yes check.svgY
ChemSpider 4925662 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6420096
பண்புகள்
CH5NO
வாய்ப்பாட்டு எடை 47.06 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

நீரிய கரைசலில் மெத்தனாலமீன் ஒரு பார்மால்டிகைடாகவும் அமோனியாவாகவும் சிதைவடையலாம் [4].

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோமெத்தனால்&oldid=2630230" இருந்து மீள்விக்கப்பட்டது