அமினோ அசிட்டோ நைட்ரைல்

வேதிச்சேர்மம்

அமினோ அசிட்டோ நைட்ரைல் (Aminoacetonitrile) என்பது அமினோ மற்றும் நைட்ரைல் தொகுதிகள் இரண்டும் இணைந்த C2H4N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் எளிய கரிமச் சேர்மமாகும். கிளைசீன் என்ற எளிய அமினோ அமிலத்தை ஒத்த பண்புகளுடன் இச்சேர்மம் காணப்படுகிறது. வர்த்தக முறையில் குளோரைடு மற்றும் சல்பேட்டு உப்புகளாக அமினோ அசிட்டோ நைட்ரைல் கிடைக்கிறது.

அமினோ அசிட்டோ நைட்ரைல்
Skeletal formula of aminoacetonitrile with an implicit carbon shown
Skeletal formula of aminoacetonitrile with an implicit carbon shown
Stereo, skeletal formula of aminoacetonitrile with all implicit carbons shown, and all explicit hydrogens added
Stereo, skeletal formula of aminoacetonitrile with all implicit carbons shown, and all explicit hydrogens added
Ball and stick model of aminoacetonitrile
Ball and stick model of aminoacetonitrile
Spacefill model of aminoacetonitrile
Spacefill model of aminoacetonitrile
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2- அமினோ அசிட்டோ நைட்ரைல்[1]
இனங்காட்டிகள்
540-61-4 Y
ChemSpider 10439 Y
EC number 208-751-8
InChI
  • InChI=1S/C2H4N2/c3-1-2-4/h1,3H2 Y
    Key: DFNYGALUNNFWKJ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த அசிட்டோ நைட்ரைல் அமினோ அசிட்டோ நைட்ரைல்
பப்கெம் 10901
வே.ந.வி.ப எண் AL7750000
  • NCC#N
UNII 3739OQ10IJ Y
பண்புகள்
C2H4N2
வாய்ப்பாட்டு எடை 56.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
கொதிநிலை 58.1 °C; 136.5 °F; 331.2 K at 2.0 kPa
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word WARNING
H302, H312, H332, H351
P280
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R20/21/22, R40
S-சொற்றொடர்கள் S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

கிளைகோலோநைட்ரைலை அமோனியாவுடன் வினை புரியச்செய்து தொழிற்சாலைகளில் பெருமளவில் அமினோ அசிட்டோ நைட்ரைல் தயாரிக்கப்படுகிறது

HOCH2CN + NH3 → H2NCH2CN + H2O

பயன்கள்

தொகு

அமினோ அசிட்டோ நைட்ரைலை நீராற்பகுப்பு செய்து கிளைசீன் தயாரிக்க முடியும்:[2] .

இச்சேர்மத்தில் இருந்து கிளைக்கும் வழிப்பொருட்கள் பயனுள்ள புழுவெதிர்ப்பிகளாக உள்ளன. குறிப்பாக நூற்புழுக்கள் ஏற்படுத்தும் அசிட்டைல்கோலின் ( ஆங்கிலச் சுருக்கம், ACh)[3] என்ற நியூரான் கடத்தி பாதிப்பு நோயால் விளையும் விறைப்பு பக்கவாதத்திற்கு எதிராகச் செயல்பட்டு நூற்புழுக்களை அவையிருக்கும் இடத்தில் இருந்து விரைவாக வெளியேற்றுகிறது.

விண்மீன்களிடை ஊடகத்தில்

தொகு

தனுசு விண்மீனுக்கு அருகே ஒரு மாபெரும் வாயு மேக மரபுவழித் தாயகத்தில் அமினோ அசிட்டோ நைட்ரைல் இருப்பதாக 2008 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது[4]. அண்டத்தில் கிளைசீன் பெருமளவில் இருக்கிறதா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உதவியாக, மேக்சு பிளாங்க் ரேடியோ வானியல் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க இக்கண்டுபிடிப்பு அமைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Aminoacetonitrile - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  2. Peter Pollak, Gérard Romeder, Ferdinand Hagedorn, Heinz-Peter Gelbke "Nitriles" Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_363
  3. Kaminsky, R.; Ducray, P.; Jung, M.; Clover, R.; Rufener, L.; Bouvier, J.; Weber, S. S.; Wenger, A.; Wieland-Berghausen, S. (2008). "A new class of anthelmintics effective against drug-resistant nematodes". Nature 452 (7184): 176–180. doi:10.1038/nature06722. பப்மெட்:18337814. Bibcode: 2008Natur.452..176K. http://www.nature.com/nature/journal/v452/n7184/full/nature06722.html. 
  4. Belloche, A.; Menten, K. M.; Comito, C.; Müller, H. S. P.; Schilke, P.; Ott, J.; Thorwirth, S.; Hieret, C. (2008). "Detection of amino acetonitrile in Sgr B2(N)" (pdf). Astronomy and Astrophysics 482 (1): 179–196. doi:10.1051/0004-6361:20079203. Bibcode: 2008A&A...482..179B. http://www.aanda.org/articles/aa/pdf/2008/16/aa9203-07.pdf. 

வெளி இணைப்புகள்

தொகு

Property data at the National Institute of Standards and Technology NIST

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோ_அசிட்டோ_நைட்ரைல்&oldid=2119237" இலிருந்து மீள்விக்கப்பட்டது