அமிர்தா ஆச்சார்யா

நேபாள -நோர்வே நடிகை

அமிர்தா ஆச்சாரியா (Amrita Acharia) ஆச்சார்யா என்றும் உச்சரிக்கப்படுகிறது ) நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடிகையாவார். இவரது தாய் உக்ரைனியர் ஆவார்.[2] எச்பிஓ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஆஃப் துரோன்ஸ் என்ற நாடகத் தொடரில் இர்ரி என்ற வேடத்திலும், ஐ தொலைக்காட்சியின் தி குட் கர்மா ஹாஸ்பிடல் என்ற தொடரில் மருத்துவர் ரூபி வாக்கர் வேடத்திலும் இவர் மிகவும் பிரபலமானவர்.

அமிர்தா ஆச்சார்யா
ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிர்தா (2014)
தாய்மொழியில் பெயர்अमृता आचार्य
பிறப்பு31 சூலை 1987 (1987-07-31) (அகவை 37)
காட்மாண்டு, நேபாளம்
தேசியம்பிரித்தானியர்
மற்ற பெயர்கள்அமிர்தா ஆச்சார்யா துன்னே
பணிநடிகை
குறிப்பிடத்தக்க படைப்புகள்கேம் ஆஃப் துரோன்ஸ்
உயரம்1.57 அடி[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அமிர்தா ஆச்சாரியா, நேபாளத்தின் காத்மாண்டுவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு நேபாள மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் உக்ரைனின் கீவ் நகரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது உக்ரைனைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான தனது தாயை சந்தித்தார். இவர் காத்மாண்டு, உக்ரைன், இங்கிலாந்து, நோர்வே ஆகிய இடங்களில் வளர்ந்தார். இவர் தன் முதல் ஏழு வருடங்களை நேபாளத்தில் கழித்தார். இவரது தந்தையின் பணி அவரையும் அவரது குடும்பத்தையும் இங்கிலாந்துக்கும், பிறகு, இவரது 13 வயதில், நோர்வேக்கும் அழைத்துச் சென்றது.[3]

19 வயதில், நோர்வேயில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இவர் நடிப்புத் தொழிலை நாடி இங்கிலாந்து சென்றார்.[4] [5] இவர், இங்கிலாந்தின் நாடகப் பயிற்சிப் பள்ளியான ஆல்ராவில் பயிற்சி பெற்றார்.[1]

தொழில்

தொகு

கேம் ஆப் த்ரோன்ஸின் முதல் இரண்டு பருவங்களில் தனெரிஸ் தர்காரியனின் தோத்ராகி ஊழியரான இர்ரியின் பாத்திரத்தில் இவர் நடித்தார். இவரது கதாபாத்திரம் இரண்டாவது பருவத்தில் இறந்தது.[6] இதில் நடிக்கும் போது ஒரு காட்சியில் இவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது.

2011இல், இவர் ஒரு முறை பிபிசியின் லாப்லாண்ட் என்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் நடித்தார்.[7] தி டெவில்ஸ் டபுள் என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பள்ளிப் பெண்ணாகவும் தோன்றினார்.

நோர்வேயின் அமண்டா விருதுகளில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்ற நோர்வே திரைப்படமான " ஐ ஆம் யுவர்ஸ் " என்பதில் இவர் நடித்தார். இந்த படம் நோர்வேயின் வெளிநாட்டு மொழி அகாதமி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது.[8] 2016 ஆம் ஆண்டில், பிரிக்ஜென்ட் என்ற நோர்வே தொலைக்காட்சித் தொடரில் அரசு வழக்கறிஞராக தோன்றினார்.

2017 முதல் தற்போது வரை இவர் ஐ தொலைக்காட்சியின் தி குட் கர்மா ஹாஸ்பிடல் என்ற நாடகத் தொடரில் மருத்துவர் ரூபி வாக்கராக நடித்துள்ளார். இவர், தனது வேலையில் விரக்தியும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு இளைய மருத்துவராக என்ஹேஸ் என்ற தொடரில் நடிக்கிறார். தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் பணிபுரியும் விளம்பரத்தில் தோன்றினார். (இந்த நிகழ்ச்சி இலங்கையில் படமாக்கப்பட்டது.[3] இந்த பாத்திரத்திற்காக சிறந்த நாடக நிகழ்ச்சி பிரிவில் 2019 தேசிய தொலைக்காட்சி விருதுகளுக்காக நீண்ட நாள் பட்டியலிடப்பட்டார்.[9]

சொந்த வாழ்க்கை

தொகு

அமிர்தா ஆச்சாரியா, 2016இல் இலண்டன் மராத்தானில் கலந்து கொண்டு 03:46:07 நேரத்தில் முடித்தார்.[10]

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் கடத்தப்பட்ட நேபாளக் குழந்தைகளை மீட்கும் தொண்டு நிறுவனமான சோராசோரிக்கு இவர் ஒரு தூதராக உள்ளார்.[11] இவர் உக்ரேனியன், உருசியம், ஆங்கிலம், நோர்வே போன்ற மொழிகளை பேசுகிறார்.[6] இவருக்கு நேபாளி மொழி பேசத் தெரியாது. ஆனால் அதைக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறினார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Amrita Acharia cv[தொடர்பிழந்த இணைப்பு] Conway van Gelder Grant. Retrieved 26 July 2019.
  2. "Nepalese actress Amrita Acharya born in Nepal". 18 June 2013. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.
  3. 3.0 3.1 Gilbert, Gerard (2017-02-01). "Actress Amrita Acharia talks Game of Thrones, Nordic noir and The Good Karma Hospital". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/tv/features/amrita-acharia-interview-game-of-thrones-irri-the-good-karma-hospital-itv-a7556451.html. 
  4. Tommy H. Brakstad (24 January 2012). "Her er Norges ukjente filmstjerne". Verdens Gang. http://www.vg.no/rampelys/artikkel.php?artid=10076405. 
  5. Dhungana, Smriti. "Coming back home after 16 years…". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
  6. 6.0 6.1 Daniel Feinberg (29 April 2012). "Amrita Acharia talks Game of Thrones". Uproxx. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.
  7. "Lapland – Christmas Special". The British Comedy Guide. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.
  8. Wiseman, Andreas (2013-09-24). "I Am Yours gets Norway Oscar nod". Screen International. 
  9. Moran, Michael (2018-10-16). "National Television Awards 2019 nominations revealed in full - as Susanna Reid brands the whole thing sexist". Daily Mirror. https://www.mirror.co.uk/tv/tv-news/national-television-awards-2019-nominations-13425903. 
  10. "Amrita Acharya Dunne 52826". Runpix. 2016-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-07-26.
  11. "Nepal Children's Charity". Encyclopedia of Things. Open Publishing. 30 April 2005. Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-26.
  12. Bhattarai, Sewa. "Amrita Acharia comes home" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தா_ஆச்சார்யா&oldid=3541294" இலிருந்து மீள்விக்கப்பட்டது