அமைரா ஹாஸ்

இசுரேலிய பத்திரிக்கையாளர்

அமிரா ஹாஸ் ( Amira Hass ; பிறப்பு 28 ஜூன் 1956) ஒரு இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்த மேற்குக் கரை மற்றும் காசாக்கரையில் பாலஸ்தீனிய விவகாரங்களை உள்ளடக்கிய ஹாரெட்ஸ் என்ற தினசரி செய்தித்தாளில் தனது கட்டுரைகளுக்காக அறியப்படுகிறார்.

Amira Hass
Amira Hass
பிறப்பு28 சூன் 1956 (1956-06-28) (அகவை 67)
எருசலேம், இஸ்ரேல்
தேசியம்இஸ்ரேலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
பணிபத்திரிக்கையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989–தற்போது வரை
பணியகம்ஹாரெட்ஸ் நாளிதழ்
அறியப்படுவதுபாலஸ்தீனிய பிரதேசங்களில் அன்றாட வாழ்க்கையின் அறிக்கை

சுயசரிதை தொகு

போஸ்னிய நாட்டில் பிறந்த செபராது யூதத் தாய்க்கும், உருமேனிய நாட்டில் பிறந்த அஸ்கனாசு யூதரான தந்தைக்கும் ஒரே மகளாகப் எருசலேமில் பிறந்தார்.[1] எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகத்தில் நாசிசத்தின் வரலாறு மற்றும் பெரும் இன அழிப்புடன் ஐரோப்பிய இடதுகளின் உறவைப் படித்தார்.

பத்திரிகை வாழ்க்கை தொகு

1991 இல் பாலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்து அறிக்கை செய்யத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1993 முதல் 1997 வரை காசாவில் மற்றும் ரமல்லாவில் பாலஸ்தீனியர்களிடையே முழுநேரமாக வாழ்ந்த ஒரே யூத இஸ்ரேலிய பத்திரிகையாளர் ஆவார். [2]

செப்டம்பர் 2014 இல், இடதுசாரி ஜெர்மன் ரோசா லக்சம்பர்க் அறக்கட்டளை மற்றும் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்திருந்த பிர்சீட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். [3]  மாநாட்டில் இஸ்ரேலியர்கள் (இஸ்ரேலிய யூதர் என்று கருதியதால்) மாநாட்டில் இருப்பதற்கு எதிரான விதியின் காரணமாக இரண்டு பிர்சீட் விரிவுரையாளர்களால் இவர் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

  • 2000 ஆம் ஆண்டில் சர்வதேச பத்திரிகை நிறுவனத்திடமிருந்து உலக பத்திரிகை சுதந்திர நாயகி விருதைப் பெற்றார். [4]
  • ஜூன் 27, 2001 அன்று, உரோமை தளமாகக் கொண்ட ஆர்க்கிவோ டிசார்மோ என்ற அமைப்பால் வழங்கப்பட்ட கோல்டன் டவ் ஆஃப் பீஸ் பரிசை பெற்றார். [5]
  • 2002 ஆம் ஆண்டில், டச்சு கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான பிரின்ஸ் கிளாஸ் நிதியத்தின் இளவரசர் கிளாஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6]
  • செப்டம்பர் 2009 இல், அல்பர் கோர்முஸ் என்பாருடன் சேர்ந்து கிரான்ட் டிங்க் சர்வதேச விருதைப் பெற்றார். [8]
  • 27 டிசம்பர் 2008 முதல் ஜனவரி 18, 2009 வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது, ஹாரெட்ஸ் என்ற இஸ்ரேலிய நாளிதழுக்காக காசா பகுதியில் இருந்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான அறிக்கைகளுக்காக டிசம்பர் 2009 இல், இவருக்கு எல்லைகளற்ற செய்தியாளர்கள் விருது வழங்கப்பட்டது.[9]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Amira Hass | 2009 Lifetime Achievement Award". International Women's Media Foundation. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011.
  2. "Israeli Journalist Amira Hass Awarded World Press Freedom Prize 2003". UNESCO.
  3. "Rosa Luxemburg Foundation Palestine". முகநூல். 16 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  4. "Amira Hass, Israel: World Press Freedom Hero (Honoured in 2000)". International Press Institute. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
  5. "Israeli journalist among those awarded Italian peace prize". Associated Press Newswires. 28 June 2001. 
  6. Prince Claus Fund. "Amira Hass". Archived from the original on 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
  7. "Hrant Dink Ödülü Görmüş ve Hass'a" (in tr). Milliyet. 16 September 2009. http://www.milliyet.com.tr/Guncel/HaberDetay.aspx?aType=HaberDetay&ArticleID=1139761&Date=16.09.2009&Kategori=guncel&KategoriID=24&b=Hrant%20Dink%20odulu%20Gormus%20ve%20Hassa&PAGE=1. 
  8. Today's Zaman, 17 September 2009, Journalists Görmüş and Haas receive International Dink Award
  9. "Press Freedom Prize Awarded to Israeli Reporter and Chechen Magazine". Reporters Without Borders. 3 December 2009. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமைரா ஹாஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைரா_ஹாஸ்&oldid=3682876" இலிருந்து மீள்விக்கப்பட்டது