அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு

வேதிச் சேர்மம்

அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு (Ammonium hexafluoroindate) என்பது (NH4)3InF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோயிண்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]

அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு
Ammonium hexafluoroindate
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு(III)
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/6FH.In.3H3N/h6*1H;;3*1H3/q;;;;;;+3;;;/p-3
    Key: FSYGVNPMCCSLOH-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [NH4+].[NH4+].[NH4+].F[In-3](F)(F)(F)(F)F
பண்புகள்
F6H12InN3
வாய்ப்பாட்டு எடை 282.93 g·mol−1
தோற்றம் colorless crystals
அடர்த்தி கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நீரற்ற மெத்தனாலில் அம்மோனியம் புளோரைடு மற்றும் இண்டியம் புரோமைடு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் அல்லது அம்மோனியம் புளோரைடு மற்றும் இண்டியம் புளோரைடை நீரிய கரைசலில் வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு சேர்மத்தை தயாரிக்க முடியும்.[3]

அம்மோனியம் புளோரைடுடன் இண்டியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்தாலும் அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு உருவாகும்.:[4]

In(OH)3 + 3 HF + 3 NH4F → (NH4)3InF6 + 3 H2O

இயற்பியல் பண்புகள்

தொகு

அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு 120-170 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து NH4InF4, ஆக மாறுகிறது. 185-300 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து InF3 ஆக மாறுகிறது.[5]

P4mnc என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிக அமைப்பில் நிறமற்ற படிகங்களாக அமோனியம் அறுபுளோரோயிண்டேட்டு படிகமாகிறது.[6] தண்ணீரில் கரையாது.[4]

80° செல்சியசு வெப்பநிலையில் நிலை மாற்றம் ஏற்பட்டு கனசதுரப் படிகமாக மாறும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Roberts, John E.; Laubengayer, A. W. (November 1957). "Fluoride Complexes of Indium(III) 1" (in en). Journal of the American Chemical Society 79 (22): 5895–5897. doi:10.1021/ja01579a016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01579a016. பார்த்த நாள்: 30 August 2024. 
  2. "Ammonium hexafluoroindate(iii)". NIST. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
  3. Zakalyukin, R. M.; Boltalin, A. I.; Fedorov, P. P. (2001). "Synthesis of ammonium hexafluoroindate". Zhurnal Neorganicheskoi Khimii 8 (46): 1247–1249. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-457X. https://www.researchgate.net/publication/256159659. பார்த்த நாள்: 30 August 2024. 
  4. 4.0 4.1 Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V1 (in ஆங்கிலம்). Elsevier. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16127-5. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
  5. Beck, Lynda K.; Haendler Kugler, Blanca; Haendler, Helmut M. (December 1973). "The thermal decomposition of ammonium hexafluorogallate and ammonium hexafluoroindate. New crystalline forms of gallium fluoride and indium fluoride". Journal of Solid State Chemistry 8 (4): 312–317. doi:10.1016/S0022-4596(73)80027-1. Bibcode: 1973JSSCh...8..312B. 
  6. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 108. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.