இண்டியம்(III) புளோரைடு
இண்டியம்(III) புளோரைடு (Indium(III) fluoride) InF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு வெள்ளை நிறமான திண்மப் பொருளாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இண்டியம்(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
இண்டியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-52-0 | |
EC number | 232-005-0 |
பப்கெம் | 82212 |
பண்புகள் | |
InF3 | |
வாய்ப்பாட்டு எடை | 171.82 கி/மோல் |
உருகுநிலை | 1,172 °C (2,142 °F; 1,445 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24 |
புறவெளித் தொகுதி | R-3c, No. 167 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Irritant (Xi) |
R-சொற்றொடர்கள் | R31, R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S36[1] |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது. |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இண்டியம்(III) குளோரைடு இண்டியம்(III) புரோமைடு இண்டியம்(III) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினியம் புளோரைடு காலியம்(III) புளோரைடு தாலியம்(I) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐதரசன் புளோரைடு அல்லது ஐதரோபுளோரிக் அமிலத்துடன் இண்டியம்(III) ஆக்சைடு வினை புரிவதால் இண்டியம்(III) புளோரைடு உருவாகிறது.[2]
பண்புகள்
தொகுரோடியம்(III) புளோரைடைப் போலவே சாய்சதுரப்பிழம்புருவ படிக அமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு இண்டியம் மையமும் எண்முக வடிவத்தில் உள்ளது.[1]
பயன்கள்
தொகுஆக்சைடு அல்லாத கண்ணாடிகளின் தயாரிப்பில் இண்டியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது. சயனோவைதரின்களை உருவாக்கும் செயல்முறையில் ஆல்டிகைடுகளுடன் மும்மெத்தில் சிலில் சயனைடு சேர்வதற்கு வினையூக்கியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "435848 Indium(III) fluoride 99.9+ % trace metals basis". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2008-06-19.
- ↑ Christoph Hebecker, R. Hoppe (1966). "Zur Kristallstrukur von Indiumtrifluorid und Thalliumtrifluorid (Crystal structure of In and Tl trifluorides)". Naturwissenschaften 53: 104. doi:10.1007/BF00601468. https://archive.org/details/sim_naturwissenschaften_1966_53_4/page/104.