அம்பலவாசி (Ambalavasi) (கோவிலில் வசிப்பவர்) என்பது இந்தியாவின் கேரளாவிலுள்ள கோவில்கள் மற்றும் ஆலயங்களில் பணிபுரிந்த இந்துக்களிடையே உள்ள ஒரு சாதியினரின் பொதுவான பெயராகும். கோயில்களில் மாலை அணிவித்தல், கோஷமிடுதல், மேளம் அடிப்பது, படிக்கட்டு இசை, கிராமத்து இசையான எக்காளம் போடுவது போன்ற பல்வேறு வகையான வேலைகளை இவர்கள் செய்தார்கள். சில அம்பலவாசி சாதிகள் தந்தைவழி உறவு முறையையும், மற்றவர்கள் தாய்வழி உறவு முறைறையையும் கடைபிடிக்கிறார்கள். திருமணத்தை கடைப்பிடிப்பவர்கள் நாயர் சாதியுடன் பல கலாச்சார ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்து மதத்தில் அவர்களின் சடங்கு தரம் பிராமண சாதிகளுக்குக் கீழும், நாயர்களுக்கு மேலேயும் உள்ளது. இவ்வாறு திருமணத்தை கடைப்பிடிப்பவர்கள் நாயர் சாதியுடன் பல கலாச்சார ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கேரளாவின் சாதி அமைப்பில், இவர்கள் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையில் அல்லது சத்த்திரியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையில் உள்ள சாதி என்று அழைக்கப்படுகிறார்கள். [1] [2] கோவில் வசிப்பவர்கள் பொதுவாக புஷ்பகன் (புஷ்பகானுன்னி), தீயாட்டுன்னி, நம்பீசன், குருக்கள், பூப்பள்ளி, திவாம்படி (பிராமணி), சாக்கியர், நம்பியார், வாரியர், மரார், போத்துவல், பிஷாரோடி மற்றும் ஆதிகல் கோயில் சேவைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கேரள கலாச்சார வாழ்க்கையில் அம்பலவாசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பெயர்க்காரணம்

தொகு

அம்பலம் மற்றும் வாசி என்ற இரண்டு சொற்களிலிருந்து அம்பலவாசி என்ற பெயர் உருவானது. கோவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில்களில் வேலை செய்வதும், அன்றாட சடங்குகளை செய்வதும் வழக்கம். அம்பலவாசி என்ற பெயருக்கு கோயிலின் புறநகரில் வசிப்பவர்கள் என்று பொருள்.

சாதிகள்

தொகு
 
மலர் கூடைகளுடன் கூடிய அம்பலவாசி பெண்கள்- ஒரு பழைய படம்

இவர்கள் பரந்த அளவில் அவை பூணூலை அணிந்தவர்கள் என்றும் அணியாதவர்கள் என்றும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

புனித நூல் அணிந்தவர்கள்

தொகு

புஷ்பக பிராமணர்கள்

தொகு

மற்றவைகள்

தொகு

புனித நூலை அணியாத அம்பலவாசிகள்

தொகு
  • பிசரோடி
  • மரார், கோயில் இசைக் கலைஞர்களாக செயல்படுகிறார்கள்
  • வாரியர் [8]
  • போதுவால், கோயில் காவலாளியாக பணிபுரிகிறார். [9] [10]

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Fuller, Christopher J. (1976). The Nayars Today. Cambridge University Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52129-091-3.
  2. Gough, Kathleen (1961). Matrilineal Kinship. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-02529-5.
  3. Fuller, Christopher J. (1976). The Nayars Today. Cambridge University Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52129-091-3.
  4. Report on the Socio-economic Survey on Castes/communities, Kerala 1968. Bureau of Economics & Statistics, Government of Kerala. 1969. p. 42.
  5. Report of the Commission for Reservation of Seats in Educational Institutions, Kerala, 1965. Commission for Reservation of Seats in Educational Institutions, Kerala, India. p. 140.
  6. Temple, Richard Carnac. The Indian Antiquary Vol-xxxvii. British India Press.
  7. Daugherty, Diane (1996). "The Nangyār: Female Ritual Specialist of Kerala". Asian Theatre Journal Vol. 13, No. 1 (Spring, 1996 (1): 54–67. doi:10.2307/1124302. 
  8. Gough, Kathleen (1961). "Nayars: Central Kerala". In Schneider, David Murray; Gough, Kathleen (eds.). Matrilineal Kinship. University of California Press. pp. 309–311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-02529-5.
  9. People of India - India's Communities N-Z. Oxford University Press. pp. 2861–2863.
  10. Census of India 1911. Vol. 23, Travancore. Pt. 2, Imperial tables. 1912.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலவாசி&oldid=3037072" இலிருந்து மீள்விக்கப்பட்டது