அம்மாச்சிவீடு முகூர்த்தி

அம்மாச்சிவீடு முகூர்த்தி என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.86 மீ. உயரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

இக்கோயிலைப் பற்றிய ஆரம்பகால வரலாறு பற்றிய வரலாற்று பதிவுகள் எதுவும் இல்லை. இருப்பினும் இது சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாச்சி வீடு குடும்பத்தால் ,கொல்லத்தை சேர்ந்த பிரபுக்களால் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. [1] [2]

துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலில் விநாயகர், ரேக்தா சாமுண்டி, பரம்பரு, யட்சி, மருதா, ராட்சசு, கந்தர்வன், வேதாளம், யோகேஸ்வரன் உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. மற்றொரு தெய்வமான டிஜின் கோயில் வளாகத்திற்கு வெளியே வைக்கப்பட்டு முஸ்லீம் சமூகத்தால் வணங்கப்படுகிறது.கோயிலை ஒட்டி ஒரு சர்ப்பக்காவு எனப்படுகின்ற பாம்புத்தோப்பு உள்ளது, அதில் பரப்பூரம்மா பகவதி, நாகராஜா, நாகயட்சி, நாக கன்னிகா ஆகியோரின் சிலைகள் உள்ளன. [1]

அர்ப்பணிப்பு

தொகு

இக்கோயிலில் மூலவர் கிடையாது. இருப்பினும் இக்கோயில் இங்கிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ள சாஸ்தம்கோட்டா கோயிலின் தர்மசாஸ்திரத்தின் குருவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [1] [2]

திருவிழாக்கள்

தொகு

இக்கோயிலில் பூசைகளும், விழாக்களும் கடைபிடிக்கப்படுகின்றன. தனு திருவிழாவின் போது ஆண்டுதோறும் 10 நாள் கொண்டாட்டத்தை நடத்துகிறது. சர்ப்ப பலி, சர்ப்பத்திற்கு வழங்கப்படுகின்ற நூரும் பாலும் போன்ற சடங்குகள் நடத்தப்பெறுகின்றன. ஒப்பந்தப்படி, அம்மாச்சிவீடு உறுப்பினர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்லக்கூடாது. [2] விழாவின் 10 வது நாளில் கரணவன் எனப்படுகின்ற குடும்பத்தின் மூத்த ஆண் பூசையை நடத்துகிறார். [3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு